வியாழன், 17 ஜூலை, 2025

வரலாறு காணாத விமானமும் இந்திய வரலாறு கண்டிராத பிரதமரும்[மோடி]!!!


தென்ன வரலாற்றில் 'முதல்முறை'யாக?

இந்த ‘முதல்முறை’ ஏராளமான வேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.

அவற்றில் கொஞ்சம்.....

*இத்தனை நீள விமானத்தைத் திருச்சி நிலையம் கண்டதில்லையா?

*வேறெந்த முன்னாள் பிரதமருக்கும் இல்லாத வகையில், மோடி வருகைக்கு மட்டும்தான் ஒத்திகை நடத்தப்படுகிறதா?[வேறெந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்த ஒத்திகை தவறாமல் இடம்பெறுமா?

*குட்டையான[நீளம் குறைவாக] விமானம் என்றால் ஒத்திகை நடைபெற்றிருக்காதா?

*மோடிக்குப் பதிலாக, ஒரு ‘டூப்ளிகேட்’ பிரதமர் வந்து இறங்குவதாக இன்னொரு ஒத்திகை நடத்தப்படுமா?

*இந்த ‘ஒத்திகை’ என்பதே திருச்சி விமான நிலைய வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்படும் ஒன்றா?

ஒத்திகையாம் ஒத்திகை, ஒற்றை நபரின் வருகைக்கு இத்தனை அலப்பறையா?

ஆம், தேவைதான். நம் பிரதமர்[தனி நபரல்ல] கடவுளால் அனுப்பப்பட்டவர்! ‘தர்மச் சக்கரவர்த்தி’ என்னும் அதி உன்னதப் பட்டம் பெற்றவர்!!