வெள்ளி, 18 ஜூலை, 2025

திணவெடுத்துத் திரியறதுகள்! அடிவயிறு கலங்குதுங்க!!

+++நாலு சின்னஞ்சிறுசுகளுக்குத் தாயான தன் பெண்டாட்டியைக் கைவிட்டுக் கள்ளக் காதலியோடு ஓடிப்போனான் ஒரு காமுகன்.

+++கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டின புருசனைக் கட்டையால் அடித்துக் கொன்றாள் ஒரு காமுகி.

+++எத்தனைப் புத்திமதி சொல்லியும் கள்ள உறவைக் கைவிடாத பொண்டாட்டியைக் கழுத்தை நெறித்துக் கொன்றான் புருஷன்காரன்.

+++கள்ள உறவைக் கண்டித்ததால், காபியில் விஷம் கலந்து கொடுத்துக் கணவன்காரனைச் சாகடித்தாள் பெண்டாட்டி.

+++கல்யாண வயசில் ரெண்டு பொண்ணுக இருந்தும் தம்பி முறைக்காரனோடு கம்பி நீட்டினாள் ஒரு அம்மாக்காரி.

+++கம்பி எண்ணினாலும் பரவாயில்லேன்னு, முகநூல் காதலனோடு வீடியோ காலில், விடிய விடிய செக்ஸ் பேசிய பெண்டாட்டியைக் கண்டதுண்டமா வெட்டி மூட்டை கட்டிகிட்டுக் காவல் நிலையத்தில் சரணடைந்தான் ஒரு ரோஷக்காரக் கணவன்.

+++‘அது’ விசயத்தில் தன்னைத் திருப்திப்படுத்தலேன்னு கல்யாணம் ஆன அடுத்த வாரமே அவனை விவாகரத்துப் பண்ணக் கோர்ட்டுக்குப் போனாள் அவனின் புதுப் பெண்டாட்டி.

+++கள்ள உடலுறவுக்கு இடைஞ்சல் பண்ணுதுன்னு பெற்ற குழந்தையைச் சுவற்றில் அடித்துக் கொன்றாள் பெற்ற அன்னை.

+++இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தும், தனக்குக் கல்யாணமே ஆகலேன்னு பொய் சொல்லி ஓடி ஓடி ஒன்பது கல்யாணம் பண்ணி, லட்சக்கணக்கில் பணம் கரந்துட்டு, பத்தாவதா ஒருத்தனை ஏமாத்தப் போய் மாட்டிகிட்ட கல்யாண ராணியைக் கைது செய்தது காவல்துறை.

இப்படியாகப் பத்திரிகைகளிலும் செய்தி ஊடகங்களிலும் தினம் தினம் வெளியாகிற செய்திகளால் அடி வயிறு கலங்குகிறது.

நினைத்தாலே நெஞ்சு பதை பதைக்கிறது.

இனியும் பத்திரிகை படிப்பதில்லை; தொ.கா.வில் செய்தி பார்ப்பது இல்லேன்னு எங்கள் குல தெய்வம் சாமி மேல நான்[‘பசி’பரமசிவம்] சத்தியம் பண்ணிட்டேங்க!

நீங்க?