தினம் தினம் காதல் தோல்வித் தற்கொலைகளும், கள்ளக் காமம், கடத்தல், வன்புணர்வு, கொலை போன்ற பாலியல் குற்றங்களும் இம்மண்ணில் பெருகிவருகின்றன.
இந்நிலையில்.....
இக்குற்றங்களால் பாதிப்பப்படாமலிருக்கக் கடைசி மூச்சுவரை, திருமணம் செய்யாமலே கிடைக்கும் வருமானத்தில் கவுரவமாக உடையுடுத்து, நாட்டு நடப்பை வேடிக்கை பார்த்து, உண்டு, உறங்கி வாழ்ந்துமுடிப்பதே நல்லது என்றெண்ணும் ஆடவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
ஆனாலும், அவர்களால் உடலுறவு ஆசையைத் துறப்பது என்பது முற்றுப்பெறாத போராட்டமாகவே உள்ளது.
துறக்கவிடாமல் தடுப்பது ஆண்களின் விந்தகங்களில் உற்பத்தியாகும் பாலின இயக்குநீர்[வேதிப்பொருள்].
மூளையிலிருந்து மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரிச் சுரப்பிக்கு அனுப்பப்படும் குறிப்பலைகள்[சிக்னல்கள்] இந்த வேதிப்பொருளைக்[டெஸ்டோஸ்டிரோன்] கட்டுப்படுத்துகின்றனவாம்.
சிக்னல்கள் அனுப்பப்படுவதை முற்றிலுமாய்த் தடை செய்துவிட்டால், காம உணர்ச்சியைத் தூண்டும் வேதிப் பொருள்[Testosterone] உற்பத்தியாகாது; ஆண்களுக்குக் காம உணர்ச்சியும் தோன்றாது.
உலகின் ஆகச் சிறந்த உடற்கூற்று விஞ்ஞானிகள் மனம் வைத்தால் சிக்னலைத் தடை செய்வது சாத்தியப்படக்கூடும்.
பட்டால்.....
ஆண்களில் பலரும் நிம்மதி பெறுவார்கள்; விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்வார்கள்.
ஹி... ஹி... ஹி!!!