//தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) 8ஆம் வகுப்புச் சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில், பாபர் ஒரு காட்டுமிராண்டித்தனமானவராகவும் வன்முறையான வெற்றியாளராகவும், மக்களைக் கொன்று குவிப்பவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அக்பரின் ஆட்சிக்காலத்தைக் கொடுங்கோல் மற்றும் சகிப்புத்தன்மையின் கலவையாக இந்தப் புத்தகம் காட்டுகிறது. இவற்றைத் தவிர, ஔரங்கசீப் ஆலயங்களையும் குருத்வாராக்களையும் அழித்தவராக விவரிக்கப்பட்டுள்ளார்//> https://www.bbc.com/tamil/articles/cwyrl54lgjyo
எப்போதோ செத்தொழிந்த அவர்கள் மீது வெறுப்புணர்வையும் பழிவாங்கும் வெறியையும் வளர்ப்பது ஏன்?
இவற்றைச் செய்வது எப்போதோ மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்டவர்களைப் பழிவாங்கியதாக ஆகுமா?
ஆகாது. அது சாத்தியமே இல்லை என்பது இப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெரியும்.
தெரிந்தும் இந்த வேண்டாத செயலை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?
கொஞ்சம் சிந்தித்தாலே புரியும், அந்த இஸ்லாமிய அரசர்களைப் பழிவாங்க முடியாத நிலையில் அவர்களுடைய வாரிசுகளை வஞ்சம் தீர்ப்பதுதான்.
வாரிசுகளைத் தண்டிப்பது கொடூரக் குற்றங்களில் ஈடுபட்ட அந்த மன்னர்களையே தண்டித்ததாக ஆகுமா?
“ஆம்” என்றாலும்.....
இந்த நாட்டில் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களின் மதத்தைச் சார்ந்தவர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். தங்கள் மதத்தவர் பழிவாங்கப்படுவதை அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா?
மாட்டார்கள்.
இந்த மண்ணில் ஊடுருவிப் பழி வாங்கியவர்களைப் பழிக்குப் பழி வாங்குவார்கள்.
இந்தப் புண்ணியப் பூமி கலவரப் பூமியாக மாறும்.
இரு தரப்பிலும் காலனுக்குப் பலியிடப்படும் உயிர்களின் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகும்.
மனிதத்தைப் போற்றி வளர்க்காமல், மத வெறியையும் மட்டுப்படுத்தப்படாத பக்தியையும் ஆயுதங்களாக்கி, ஆட்சியில் நீடிக்கத் திட்டமிடும் இந்த நாசகாரக் கும்பலை அடித்து விரட்டாமல் மக்கள் வேடிக்கை பார்ப்பது நாட்டு நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும்!
தொடர்புடைய செய்தி: