எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 20 ஜூலை, 2025

மோடி கடவுளா, பித்தேறிய புத்தி கெட்ட பக்தரா?!

னைத்து உயிரினங்களுக்குள்ளும் மனிதன் மட்டுமே கடவுளைப் போற்றி வழிபடுகிறான். 

இந்த வழிபாட்டின் மூலம் பல நன்மைகளைப் பெற்றிட முடியும் என்று நம்புகிறான்; கடவுள் வழங்கிய ஆறறிவைப் பயன்படுத்திப் பல தகாத செயல்களிலும் இவன் ஈடுபடுகிறான்.

தன் விருப்பம்போல் பயன்படுத்துவதற்கான இந்த ஆறறிவை, பிற உயிரினங்களைத் தவிர்த்து மனிதனுக்கு மட்டுமே ஏன் அருள்பாலித்தார் கடவுள்?

இது அவரால் படைக்கப்பட்ட அந்தப் பிற உயிரினங்களுக்குச் செய்த துரோகம் அல்லவா?

துரோகம் செய்பவர் துரோகி.

கடவுள் துரோகியா, அல்லவா?

கோயில், குளம், புண்ணியத்தலம் என்று கோரிக்கைகளுடனும், காணிக்கை செலுத்த மூட்டை மூட்டையாய்ப் பணத்துடனும் அலையும் சுத்தப் பக்திமான்கள்> பக்திப் பித்தேறியவர்கள் சிந்திப்பார்களா?!