இந்துவோ இஸ்லாமோ கிறித்தவமோ நீங்கள் எம்மதம் சார்ந்தவராயினும், உங்களுடைய வழிபடு கடவுளின் அருளைப் பெற்றிட[உடனடியாக] ஓர் எளிய வழி.
முதலில் கைப்பை ஒன்றில் சில்லரையாக ரூபாய்த் தாள்களையோ சில்லரை நாணயங்களையோ நிரப்பிக்கொள்ளுங்கள்.
அனைத்து மதக் கோயில் வாசல்களிலும் உங்களிடம் தர்மம் பெறுவதற்காகப் பிச்சைக்காரகள் அணிவகுத்துக் காத்திருப்பார்கள்.

அடுத்த வினாடியே நீங்கள் எதிர்பார்க்கிற புண்ணியம் உங்களின் ‘பாவ புண்ணியம்’ கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். கடவுளிடம் வைக்கவிருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிடும்.
அடுத்த வினாடியே அது நிகழக் காரணம்.....
பிச்சைக்கார்களுக்கிடையே வழக்கமாகக் காத்திருக்கும்[அருவமாக], கடவுள்[எந்தவொரு மதத்தவர்க்கு உரியவராயினும்] நீங்கள் தர்மம் செய்வதைப் பார்த்ததும் உங்கள் மீது அருள்மழை பொழிவதுதான்.
மற்றபடி, பிச்சைக்கார்களுக்குத் தர்மம் செய்யாமல் கோயிலுக்குள் சென்று வழிபடுவதால், கடவுளின் அருளைப் பெற்றிட வாய்ப்பே இல்லை என்பதை அறிவீராக.
"எல்லாம் சரி, உலகத்தைப் படைத்து, உயிர்களுடன் மனிதர்களையும் படைத்து, அவர்களில் பிச்சைக்காரர்களையும் உருவாக்கி, மற்றவர்களில் கொஞ்சம் பேரைத் தர்மவான்கள் ஆக்கி..... கடவுள்[கள்?!] எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்?”னு யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.
அடியேனுக்கும் புரியும்படி சொல்லத் தெரியாது!! ஹி...ஹி...ஹி!!!