“கொள்கை வேறு கூட்டணி வேறு” என்று பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார் எடப்பாடியார்['சன்' தொ.கா. செய்தி> காலை 06.50].
‘பாஜக’வின் இந்த ஆயுட்காலக் கொத்தடிமை மட்டுமல்ல, சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இப்படிப் பேசுவது வழக்கமாகிவிட்ட ஒன்று.
அவன்கள் தேர்தலில் வென்று ஆட்சிபீடம் ஏறி, ஊழல்களில் ஊறித் திளைத்துக் கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பதற்கென்றே[அதை வைத்து மாற்றுக் கட்சிக்காரர்களை விலைக்கு வாங்குவதும், கொத்தடிமைகளின் எண்ணிகையை அதிகரிப்பதும், அதிகாரிகளுக்குப் பங்கு கொடுத்துத் தங்களின் விருப்பம்போல் ஆட்டிப்படைப்பதும் வழக்கம்] அரசியல் செய்பவன்கள். இவன்களோ, மக்களுக்குத் தொண்டு செய்வதே தங்கள் லட்சியம் என்பவன்கள், பதவி பறிபோன நிலையில்.
இவன்கள் தங்களைத் தன்மானத் தமிழர்கள் என்று பீற்றிக்கொள்பவன்கள். அவன்கள் தமிழர்கள் என்றில்லாமல், இந்த நாட்டிலுள்ள அனைத்து இனத்தவரையும் ‘இந்தி’யனுக்கு அடிமைகளாக்கத் துடிப்பவன்கள்.
இவன்கள் தங்களின் மொழி வளர்ந்தால் போதும் என்று நினைப்பவன்கள். அவன்களோ இந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கும் தங்களின் மொழி[இந்தி] கோலோச்ச வேண்டும் என்று கனவு காண்பவன்கள்.
அவன்கள் ஆண்டான்களாகவே இருந்து பதவி சுகம் அனுபவிப்பவன்கள். இவன்கள் கொண்ட கொள்கைக்காக எந்தவொரு தியாகமும் செய்யத் தயார் என்று நாளும் முழங்கிக்கொண்டிருப்பவன்கள்.
இவன்கள் தென் துருவம் என்றால் அவன்கள் வடதுருவத்தவன்கள்.
இவை மேற்கண்ட இருவன்களுக்கும் இடையே உள்ள சில[பல உள்ளன] வேறுபாடுகள் மட்டுமே[நல்ல கொள்கைகள் இல்லாத இந்தச் சுயநலக் கும்பல்கள் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றால் சமுதாயத்திற்குப் பெரும் கேடுகளே விளையும்].
இந்த இரு இவன்களும் “கொள்கை வேறு கூட்டணி வேறு” என்று வாய் கிழியப் பேசித் திரிவது யாரை முட்டாளாக்க?
வேறு யாரை, சிந்திக்கும் அறிவை இவன்கள் தரும் அற்பத் தொகைக்காக அடகு வைக்கும் பொதுமக்களைத்தான்!

