உலகளவில் இறப்புக்கு இருதய நோய்கள்(CVDs) முதன்மைக் காரணமாக உள்ளன.
இது ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன்[ஒரு கோடியே 79 லட்சம்] மனிதர்களைக் கொல்கிறது.
இதய நோய்களால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமற்ற உணவு, உடல் இயக்கமின்றிச் சோம்பிக் கிடத்தல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல், மது குடித்தல், மிகு ரத்த அழுத்தம், மிகையான சர்க்கரை, ரத்த லிப்பிட்டுகள்[கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால், பாஸ்போலிப்பிட்கள் போன்றவை], அதிகரித்தல், உடல் பருமன், அசுத்தம் நிறைந்த சுற்றுச் சூழல் போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.
மருத்துவர்களை அணுகி, நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவதன் மூலம் இதய நோயால் ஏற்படும் திடீர் மரணங்களைத் தவிர்க்கலாம்
உயிர்ப் பாதுகாப்புக் குறித்த அறிவிப்பை[விழிப்புணர்வு]ச் செய்திருப்பது 'WHO' எனப்படும் உலகச் சுகாதார நிறுவனம் ஆகும்.
* * * * *
விரிவான தகவல்களுக்கு:
https://www.who.int/health-topics/cardiovascular-diseases#tab=tab_1
