ஒரு பிரமுகரை இன்னொரு பிரமுகரோ பிரமுகர்களோ சாமானியர்களோ சந்திக்கும்போது பூச்செண்டு[Bokeh> செலவு ரூ500லிருந்து ரூ1000வரை] கொடுப்பது பின்பற்றப்படும் நடைமுறை.
இம்மாதிரி நிகழ்வுகளின்போது கொடுக்கப்படும் பூச்செண்டுகளும் மலர்க்கொத்துகளும், அவற்றைப் பெறும் பிரமுகருக்கு எவ்வகையிலும் பயன்படுவதில்லை[நாட்கணக்கில் வீடெங்கும் பரப்பி வைத்துப் பூக்களின் வாசனையை நுகர்ந்து இன்புறுவதில்லை]; வீணடிக்கப்படுகின்றன என்பதே உண்மை.
இந்தப் பழக்கம் அரசியல்வாதிகளால் வழக்கம் ஆக்கப்பட்டுவிட்ட ஒரு வகை மூடப்பழக்கம் ஆகும்.
இதன் விளைவு வீண் பண விரயமும்கூட[“ஒன்னொன்னாச் சேர்த்தாத்தான் ஒரு நூறு ஆகும்” என்னும் வழக்கு மொழியை நினைவுகூர்க].
சால்வைகள் போர்த்துவதும் இவ்வகையான போலி நாகரிகம்தான்[சால்வை போர்த்தப்படும் காட்சிகளைக் காணும்போதெல்லாம், போர்த்தப்படும் பிரமுகரிடம்[சாமானியர் அல்ல] போர்வைகளோ சால்வைகளோ இல்லையா என்னும் கேள்வி அடியேன் மனதில் எழுவதுண்டு> சாலை ஓரங்களில் அழுக்கேறிய கிழிந்த ஆடையுடனும் பரட்டைத் தலையுடனும் படுத்துக்கிடக்கும் ஏழைகளுக்குக் கொடுத்தால் அது பயனுடைய செயலாக அமையும்].
நூல்கள் கொடுக்கலாம் என்பதுகூட ஏற்கத்தக்கதல்ல. மரியாதைக்குரியவர் நல்ல படிப்பாளியாக இருந்தால்[இருத்தல் மிக மிக அவசியம்] மரியாதை செலுத்த வருவோர் வரிசையில் நின்று கொடுக்கும் நூல்கள் அவருக்குப் பயனற்றுப்போகலாம். அவற்றை அகற்றுவது[தெருவில் போவோர் வருவோருக்கு வழங்கலாம். புத்தகம்தானே என்று எவரும் வாங்கமாட்டார்] அவருக்குத் தேவையற்ற சுமையாக ஆகவும் வாய்ப்புள்ளது.
ஆக.....
மரியாதை செலுத்தக் கையாளப்படும் மேற்கண்ட வழிமுறைகளை முற்றிலுமாய்த் தவிர்த்து, பிரமுகரைச் சந்திக்க வருவோர்[காரணம் எதுவாயினும்] கைகூப்பி வணக்கம் சொல்லுவதே[மனப்பூர்வமாக] போதுமானதாகும்.
இது வெகு சாமானியனான அடியேன் ஒட்டுமொத்த, உலகெங்கும் உள்ள முட்டாள் பிரமுகர்களுக்கு வழங்கும் அறிவுரை பரிந்துரை!
ஹி... ஹி... ஹி!!!

