எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 1 செப்டம்பர், 2025

எச்சரிக்கை!... இருதயத்தைக் காக்க இதயப்பூர்வமான அக்கறை தேவை!

//சவீதா மருத்துவக் கல்லூரியின் ஆலோசகரும், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணருமான 39 வயதே ஆன டாக்டர் கிராட்லின் ராய்[மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்] புதன்கிழமை மருத்துவமனையில் சரிந்து விழுந்தார்//*

ஸ்டென்டிங் மூலம் அவசர ஆஞ்சியோபிளாஸ்டி, இன்ட்ரா-அயோர்டிக் பலூன் பம்ப், ECMO(Extracorporeal Membrane Oxygenationa life-sustaining machine that acts as an artificial heart and lung for critically ill patients whose own organs cannot provide enough oxygen and blood to the body] என்றிப்படி இயன்றவரை சிகிச்சை அளித்தும் சக மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்பது மாரடைப்பு எத்தனை அபாயகரமானது என்பதை அறியச் செய்கிறது.

இம்மாதிரியான திடீர் இதய நோய்த் தாக்குதலுக்கு மருத்துவ வல்லுநர்கள் பட்டியலிடும் காரணங்களாவன:

*மிகப் பல மணி நேரப் பணி[மருத்துவர்கள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 12-18 மணிநேரம் பணி செய்கிறார்கள்; சில நேரங்களில் தொடர்ந்து[ஒரே ஷிப்டில்] 24 மணி நேரத்திற்கும் மேலாக..... > இது ஏனையத் துறைகளில் பணி செய்வோருக்கும், தொழில் முனைவோருக்கும் பொருந்தும்].

*கடுமையான மன அழுத்தம்[மருத்துவர்கள் தம் மீதான நோயாளிகளின் அதீத நம்பிக்கையைத் தக்கவைத்திடப் பெரிதும் கவலைப்படுவதாலும், வாடிக்கையாளரைத் தக்க வைத்திடப் பல்வகைத் தொழில் செய்வோர்  ஓய்வின்றிக் கடினமாக உழைப்பதாலும் ஏற்படுவது].

*ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள்[மருத்துவர்களும் விதிவிலக்கல்லர்]. 

*உணவு உண்பதில் ஒழுங்கின்மை. 

*முறையான உடற்பயிற்சியின்மை.

*எதிர்கொள்ளும் தீராத பிரச்சினைகளால் உண்டாகும் உடல் சோர்வு, மனச்சோர்வு, பதற்றம் ஆகியன.

இதயம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டிருக்கும் மருத்துவர்களே அதன் தாக்குதலுக்குப் பலியாகிறார்கள் என்றால், அது குறித்துப் போதிய அறிவில்லாதோரின் நிலை?

இளம் வயதிலும் உயிர்களைப் பலிகொள்ளும் முக்கியக் காரணிகளில் ஒன்று இதய நோய் என்பதை எவரும் மறத்தல் கூடாது.

*https://www.tamilmurasu.com.sg/tamilnadu/39-year-old-heart-surgeon-dies-heart-attack