எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 1 செப்டம்பர், 2025

“அய்யா முருக[ன]ய்யா, யாருங்க அய்யா அந்தச் ‘சான்றோர்’? சொல்லுங்க அய்யா!”

 

ஒன்றிய இணை அமைச்சர்[சங்கித் தலைவர்களுக்கு ஒத்தூதும் ஈடு இணையில்லாத அமைச்சர்] எல். முருகன் அய்யா அவர்களே,

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைத் தமிழ்நாடு அறநிலையத் துறையிடமிருந்து பறித்து, சான்றோர்கள் & ஆன்மிகப் பக்தர்கள் அடங்கிய குழுவிடம் ஒப்படைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறீர்கள்.

பக்தர்கள் என்றாலே கடவுள் பக்தர்கள் என்று எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ‘ஆன்மிகப் பக்தர்கள்’ என்று அடித்துவிட்டிருக்கிறீர்கள். ஆன்மிகம் என்னும் சொல்லாட்சி, ஆன்மா பற்றியும் அதனோடு தொடர்புடைய கடவுளைப் பற்றியும் பேசுவதைக் குறிக்கிறது. இந்தச் சொல்லாராய்ச்சி இங்குத் தேவையில்லை என்பதால், நீங்கள் ஆன்மிகப் பக்தர்கள் என்றது கடவுள் பக்தர்களை என்றே கருதி, உங்களுடைய அறிவுரைகள் குறித்து மட்டும் கருத்துரை வழங்குகிறோம்.

அறநிலையத் துறையைச் சான்றோர்களிடம்[+பக்திமான்கள்] ஒப்படைத்தல் வேண்டும் என்கிறீர்கள், யார் அந்தச் சான்றோர்கள்?

‘சான்றோர் என்பவர், நல்லொழுக்கம் உடையவர், அறிஞர், கல்வி & கேள்விகளில் உயர்ந்தவர், சால்புடையவர், வீரர் எனப் பல்வேறு தகுதிகளைப் பெற்றவர்’ என்கின்றன தமிழ் அகராதிகள்.

இவ்விலக்கணத்தின்படி நல்லொழுக்கம், அறிவுடைமை, உயர் பண்புகள் போன்றவை வாய்க்கப்பெறற சான்றோர்கள் இன்றும் வாழ்கிறார்களா? உங்களால் ஒரு பட்டியல் தர இயலுமா?

‘இயலாது’ என்பதை நீங்கள் அறிந்திருந்தால் மேற்கண்டவாறு தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்கியிருக்கமாட்டீர்கள்.

நீங்கள் குறிப்பிடுகிற பக்தர்களும் அறநிலையத் துறையை நிர்வகிப்பதற்கான அருகதை இல்லாதவர்களே.

அதை உறுதிப்படுத்துகிறது அடுத்து இடம்பெற்றுள்ள உங்களின் உரை. 

இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்துகொண்டுள்ளன” என்கிறீர்கள்.

2 லட்சம் இடங்களில் ஊர்வலம் நடத்துபவர்கள் 2 கோடிக்கும் மேற்பட்ட முட்டாள்கள் என்பதை மறந்துவிட்டீர்கள்.

நம் அப்பாவி மக்களை முட்டாள்களாக்குவதன் மூலம் தங்களை மேட்டுக்குடிகளாக்கிச் சொகுசாக வாழ்ந்திட, மீனாட்சி அம்மையின்[ஒரு கடவுள் இருப்பதே நிரூபிக்கப்படாத நிலையில்] உடல் அழுக்கிலிருந்து விநாயகர் உதித்ததாக அயோக்கியர் கூட்டம் கட்டிவிட்ட கதைகளை நம்புகிறவர்களை வேறு என்ன சொல்லி அழைப்பது?

இந்த முட்டாள்களிடம்தான் அறநிலையத் துறையை ஒப்படைத்திட வேண்டும் என்கிறீர்கள்.

முட்டாள்களின் பொறுப்பில் இத்துறை இருப்பதைவிட, கொஞ்சமேனும் சிந்திக்கத் தெரிந்தவர்களின் பொறுப்பில் இருந்தால் பெரும் தீங்குகள் விளையா[மூடப் பக்தியிலிருந்து மக்கள் விடுபடும்வரை] என்பது நம் நம்பிக்கை.

ஆக,

உங்களுக்குப் பதவிப் பிச்சை போட்டவர்கள் என்பதற்காக முட்டாள் சங்கிகளுக்கு நீங்கள் முட்டுக்கொடுப்பதுடன் நிறுத்திக்கொண்டு, இனியும் மேற்கண்ட வகையில் அறிவுரை வழங்காமலிருந்தால், அது நம் தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவதாக அமையும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.