எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

நாடக நடிகர் மோடியிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவாரா கடவுள்?!

//தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SCO) உச்சிமாநாடு, இந்தியாவின் ‘மூலோபாயச் சுதந்திரத்தை வெளிப்படுத்தவும், தந்திரோபாயக் கூட்டாண்மைகளை’ச் சமநிலைப்படுத்தவும், இந்தியா அதன் சொந்த விதிகளின்படி செயல்படுகிறது என்பதை உலகிற்கு நினைவூட்டவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மேடையாக இருந்தது// -இது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்தி.

அதென்ன ‘மூலோபாயச் சுதந்திரமும் தந்திரோபாயக் கூட்டாண்மைகளும்?

இம்மண்ணுக்கு மோடியை அனுப்பிவைத்த கடவுளுக்கும், அவர் கோயில் கட்டிக் கும்பிடுகிற பாலராமருக்குமே வெளிச்சம்.

//மோடியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் தங்கள் இருதரப்புச் சந்திப்பிற்காக ஒரே காரில் ஒன்றாகப் பயணித்தபோது அன்றைய வரையறுக்கும் திட்டம் உருவானது. முன்னதாக, உச்சிமாநாட்டின் ஓரத்தில் மோடி, புடின் & சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகிய இருவருடனும் அன்பான கைகுலுக்கல்களையும் அணைப்புகளையும் பகிர்ந்துகொண்டார் அவர். மேற்கத்திய நாடுகளுடன் அடிக்கடி முரண்படும் இரண்டு சக்திகளின் தலைவர்களுடனான இந்த அரிய அரவணைப்புக் காட்சிகள் தற்செயலானவை அல்ல, வேண்டுமென்றே நடத்திய இராஜதந்திர நாடகம். இது டிரம்பை வியப்பில் ஆழ்த்தும் ஒரு காட்சி// -இவை கூடுதல் செய்திகள்.

காரில் ஒன்றாகப் பயணிப்பதும், கை குலுக்குவதும், அணைத்துக்கொள்வதும் ராஜதந்திர நாடகமாம்.

எதற்கு இந்த நாடகம்?

“ஒரு புதிய எதிரியை[டிரம்ப்] எதிர்க்கத் ‘தில்’ இல்லாததால் அவரைத் தோற்கடிக்க, நம் மண்ணை ஆக்கிரமித்தவரும், வீரர்களின் உயிர் பறித்தவருமான பழைய மோசமான எதிரியிடம்[சீனா அதிபர் ‘சின்பிங்’> புடின் வெறும் பார்வையாளர் மட்டுமே] சரணடைந்தேன்” என்று சொல்லியிருக்கலாம்.

மோடி பற்றி நாம் சொல்ல விரும்புவது:

ஒரு புதிய எதிரியைச் சமாளிக்க நாடகம் நடத்துவதாகச் சொல்லித் தன் நாட்டு மக்களிடமே நாடகங்கள் நடத்தும் உலகின் ஒரே பிரதமர் இவர் மட்டுமே.

இந்திய மக்களை எல்லாம் வல்ல கடவுள்[இருந்தால்] காப்பாற்றுவாராக!

* * * * *

தொடர்புடைய ஊடகச் செய்தி:

https://www.maalaimalar.com/news/national/the-spineless-modi-government-supports-the-dominance-of-china-which-is-allied-with-pakistan-congress-786589