இன்று மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடிக்கு அங்குக் குவிக்கப்பட்டுள்ள ‘துணை ராணுவம்’['துணை ராணுவம் என்பது ஒரு நாட்டின் முறைப்படுத்தப்பட்ட இராணுவ அமைப்பிற்கு வெளியே செயல்படும் ஒரு படை அல்லது அமைப்பு ஆகும். இந்தப் படைகள் இராணுவ அமைப்புகளைப் பின்பற்றி, இராணுவத்தைப் போன்ற பயிற்சி & உபகரணங்களைக் கொண்டிருக்கலாம்’] பாதுகாப்பு அளிக்கும் என்பது ஊடகங்களில் வெளியான செய்தி.
இந்தியாவை 2047இல் ‘நம்பர் 3’[‘1’ நமக்கு ராசியான நம்பர் அல்ல] உயர் பொருளாதார நாடாக ஆக்குவதற்கு ஊனுறக்கம் இல்லாமல்[ஒரு நாளில் 3 அல்லது 4 மணி நேரமே உறங்குவதாக அவரே கூறியிருக்கிறார்] பாடுபடும் மோடியை நம் மக்கள் தம் உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்.
எனவே, மணிப்பூர் சென்று திரும்பும்வரை அவருக்குப் பாதுகாப்பு வழங்கிடத் துணை ராணுவம் போதாது; ராணுவமே அந்தக் கடமையைச் செய்திடல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.
மோடி வாழ்க! மணிப்பூர் வாழ்க; வளர்க!!
