எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 14 அக்டோபர், 2025

கோயிலுக்குள் கொண்டாட்டம்! வெளியே வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டம்!!

பிச்சை எடுப்பது ஒரு பழங்காலச் சமூக நிகழ்வாகும். இடைக்காலத்திலும் முந்தையக் காலங்களிலும் பிச்சை எடுப்பது ஏற்றுக்கொள்ளுதற்குரிய தொழிலாகக் கருதப்பட்டது[விக்கிப்பீடியா].

அக்காலமோ இக்காலமோ கோயிலுக்குச் சென்று, உண்டியலில் பணம் போட்டு[வசதிக்கேற்ப அதன் அளவு கூடும்; குறையும்]க் கடவுளிடம் வேண்டுதல் வைப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. காரணம், மக்களிடம் குறையவே குறையாத பக்தியுணர்வு.

பக்தர்களின் எண்ணிக்கை குறையாதது போலவே, கோயில் வாசலில் கூடிப் பிச்சைக்குக் கையேந்துவோர்[பலரும் உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்; உழைத்துப் பிழைப்பதற்கான உடல் வலிமையை இழந்தவர்கள்]   எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை[அதிகரிக்கிறது].

இந்த அவல நிலையை மாற்ற.....

பக்தர்கள் அத்தனைப் பேரும் கடவுளைக் கொண்டாடச் செலவழிக்கும் பணத்தைப் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தலாம்[உரிய முறையில், இது சம்பந்தப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற குழுக்களிடம் நன்கொடை வழங்குவதன் மூலம்> அங்கே ஊழல் இடம்பெறாமல் கண்காணிப்பது சமூக ஆர்வலர்களின் கடமை].

ஆனால், பக்தர்களோ பயன்படுத்துவதில்லை. காரணம் அவர்களின் மனங்களில், பக்தியுணர்வு நிரம்பி வழிகிறதே தவிர, போதுமான அளவுக்குப் ‘பரிவுணர்வு’ சுரப்பதில்லை.

பைசா பொறாத பக்தி! திருந்தும் மனப்பக்குவம் இல்லாத மக்கள்!!

விடிவு பிறப்பது எப்போது?