எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 30 நவம்பர், 2025

பாவத்திற்குச் சம்பளம் தருபவர் ‘இல்லாத’ கடவுள் அல்ல; மனிதர்களே!

                        *‘பாவத்தின் சம்பளம் மரணம்’[கடைசிப் பத்தி]

மேலே கண்டது[செய்தி> தமிழ் முரசு> 30.11.2025]போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது சமுதாயத்தில் இடம்பெறுபவைதான் என்றாலும், வாசிப்போரைக் கடும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்குபவை அவை.

விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு ஆறறிவுடன் வாழத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் ஒன்றுபட்ட ஒரு சமூகமாக இணைந்தார்கள்.

ஒற்றுமையுடனும் மன அமைதியுடனும் வாழ்வதற்காகப் பல நெறிமுறைகளை வகுத்தார்கள்; கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அக்கட்டுபாடுகளில், ஓர் ஆணும் பெணும் இணைந்து அந்தரங்கச் சுகம் அனுபவிக்க விரும்பினால், திருமணம் செய்துகொண்டு என்றென்றும் பிரியாமல் வாழ்தல் வேண்டும் என்பதும் ஒன்று[அது சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகிறது, புனிதமானது என்பதெல்லாம் ஒருவகை மூடநம்பிக்கையே].

ஆக, திருமணம் என்பது வெறும் ஒப்பந்தமே என்பதால், கணவன் மனைவிக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்து அவற்றைச் சீர் செய்ய இயலாதபோது இருவரையும்[குழந்தைகள் இல்லாமலிருந்தால்] உடனடியாகப் பிரிந்து வாழ அனுமதிப்பது ஏற்புடையது.

குழந்தைகள் இருந்தால், அவற்றின் எதிர்காலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால்தான், சமூக ஆர்வலர்கள் திருமணம் ஆனவர்கள் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் சில ஆண்டுகள் கழித்தே குழந்தை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்[சட்டம் இயற்றலாம்] என்கிறார்கள்.

பிரிந்து வாழும் உரிமை எளிதாக்கப்பட்டால்,  மனைவி துரோகம் இழைக்க நேரும்போது, அது தனக்கு அவமானம் என்று கணவன் அவளைத் தாக்குவதும் கொலை செய்வதும்[+மனைவி கணவனைக் கொல்வது] பெருமளவில் நிகழாது எனலாம்.

இது தொடர்பாக, ஆட்சியாளர்கள் ‘அறிஞர்கள் குழு’ அமைத்து ஆராய்ந்து விரைந்து முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.

சனி, 29 நவம்பர், 2025

நம் பிரதமருக்கு உலகின் உயரமானதொரு[600 அடி] தங்கச் சிலை வைப்போம்!

//தெற்குக் கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550ஆவது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட 77 அடி உயர[உலகின் அதிக உயரமான ராமரின் வெண்கலச் சிலை] ராமரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். ஜீவோட்டம் மடம் உருவாக்கியுள்ள ராமாயண நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பூங்கா தோட்டத்தையும் அவர் திறந்து வைத்தார்.....

சிறப்பு அஞ்சல் தலை & நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று இந்தியா ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்துவருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் & புதுப்பித்தல், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் விரிவாக்கம் ஆகியவை நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு & ஆன்மிகப் பாரம்பரியத்தின் தீவிர மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன//[செய்தி*]

ஆன்மிகத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், பக்தர்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும் கோயில்கள் கட்டுதல், விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல் என்று மோடி ஆற்றிய/ஆற்றும் பணிகள் அளப்பரியன.

உலகச் சுற்றுலாச் செல்வதற்குச் செலவழிக்கும் நேரத்து இணையாக இதற்குச் செலவழிக்கிறார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

மேலும், 100% கற்பனைப் படைப்பான ராமாயணத்தின் கதாநாயகன் ராமனை ஒரு கடவுளாக[ஏற்கனவே கடவுள் ஆக்கப்பட்டவன்] மக்களின் மனங்களில் பதியச் செய்ய.....

வெளியூர்ப் பயணங்களில், ஆங்காங்கே உள்ள  பிரபலமான கோயில்களுக்குப் பரிவாரங்களுடன்  செல்லும்போதெல்லாம், அர்ச்சகர்கள் இவருக்கு மலர் மாலை அணிவித்துக் கிரீடம் சூட்டி வரவேற்பதையும், தான் குனிந்து தரை தொட்டு, அல்லது குப்புற விழுந்து சாமி கும்பிடுவதையும், நாட்டு மக்கள் கண்டு மெய் சிலிர்க்கும் வகையில் காணொலியாக்கி, அவற்றை ஊடகங்களில் வெளியிடுதல் போன்ற இவர் ஆற்றிய/ ஆற்றும் இறைத் தொண்டு அளவிடற்கரியது.

சுருங்கச் சொன்னால், இவர் பக்தி நெறி பரப்புவதற்கென்றே கடவுளால் இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓர் ஆன்மிக ஞானி  என்று உறுதிபடச் சொல்லலாம்.

இத்தகையதொரு அர்ப்பணிப்பாளர் இந்நாள்வரை இந்த மண்ணில் அவதரித்ததில்லை என்பதால்.....

ஒட்டுமொத்த உலகமும் வியக்கும் வகையில், 600 அடி[உலகிலேயே அதிக உயரமானது> வல்லபாய் படேல் சிலை 597 அடி]யில், தங்கத்தால் ஆனதொரு சிலையை நிறுவுவது இந்தியக் குடிமக்களின் கடமை ஆகும்.

வெள்ளி, 28 நவம்பர், 2025

நாள்தோறும் முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

முட்டையில் கொழுப்பு அதிகம் இருப்பதாக அஞ்சி அதை உண்பதைப் பெரும்பாலோர் தவிர்க்கிறார்கள்.

உண்மையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கோலின், செலினியம், ஃபோலேட், இரும்பு போன்ற தாதுக்களும், பயோட்டின், பி12, ஏ, டி, ஈ கே போன்ற வைட்டமின்களும், தசைகள் & இணைப்புத் திசுக்களுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிறைந்தது முட்டை. இதில் லுடீன், ஜீயாக்சாண்டின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.

முட்டையில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, பெரும்பாலும் முட்டையால் கொழுப்பு அதிகரிக்காது; இது கண்புரை உருவாவதைத் தடுக்கிறது; மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது; தசைகளை வலுப்படுத்துகிறது; ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்துகிறது. இதனால் HDL[நல்ல கொழுப்பு] அளவு கூடுகிறது.

வெள்ளை, பழுப்பு என்னும் இரு நிறங்கள் கொண்ட முட்டைகளும் உடம்புக்கு நன்மை பயப்பனவே.

முட்டையை வேகவைத்தோ பாத்திரத்தில் வறுத்தோ ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்;  வதக்கிய கீரை, தக்காளி, காளான்கள், வெங்காயம் போன்ற காய்கறிகளைச் சேர்த்தும் உண்ணலாம்.

ஆக, தினமும் முட்டை உண்பதால் பல நன்மைகள் உண்டே தவிர, தீமைகள் இல்லை என்பது அறியத்தக்கது.

                                              *   *   *   *   *

https://www.msn.com/en-in/money/topstories/what-happens-when-you-eat-eggs-daily-for-two-weeks-harvard-trained-gastroenterologist-explains/ar-AA1R135j?ocid=winp2fp&cvid=692953a61e9c4c12a5a72f2ff1e031a9&ei=15

வியாழன், 27 நவம்பர், 2025

தைராய்டு புற்று நோய்... ஒரு ஊசி மருந்து ரூ3.55 லட்சமாம்? அடக் கடவுளே!

பிரபல கன்னட நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் ராய், தனது 55ஆவது வயதில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்று வயிற்றுக்கும் பரவியதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார் என்பது செய்தி*

அவரின் மறைவு குறித்த செய்தியில், தைராய்டு சிகிச்சைக்கான மருத்துவச் செலவு பற்றிய விவரமும் கீழ்க்காணும் வகையில் வெளியாகியிருந்தது.

ஒரு ஊசிக்கு ரூ.3.55 லட்சம் செலவாகும். ஒரு சுழற்சிக்கு மூன்று ஊசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, மொத்தம் ஒவ்வொரு 63 நாட்களுக்கும் ரூ.10.5 லட்சம் செலவாகும். முழுமையான சிகிச்சைக்கு ரூ.70 லட்சம்வரை தேவைப்படும்.

இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்தாலும், தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைப்பது அரிது என்னும் நிலையில்***, சாமானியர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெறுவதற்கே வழியில்லை என்பது மிகப் பெரிய சோகம்.

ஆகவே, “அயல் கிரக ஆராய்ச்சி, உயிர்களைப் பலிகொள்ளும் கொடூர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது, சொகுசுப் பயணத்திற்கான நவீன வாகனங்களை உற்பத்தி செய்வது போன்றவற்றிற்கு அறிவியலைப் பயன்படுத்தாமல், புற்றுநோய் போன்ற எளிதில் குணப்படுத்த இயலாத நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அதை பயன்படுத்துவது மனித இனத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்” -இப்படிச் சொல்ல வேண்டியவர்கள் அறிவியல் ஆய்வில் முன்னணி வகிக்கும் நாடுகளின் ஆட்சியாளர்கள்.

*https://www.msn.com/en-in/health/other/harish-rai-death-kgf-actor-passes-away-at-55-after-battling-cancer/ar-AA1PUnWK?ocid=msedgdhp&pc=NMTS&cvid=690def20f09044e496834cf6724e90b2&ei=54

                                 *   *   *   *   *

***//தைராய்டு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதைத் திறம்பட நிர்வகிக்கலாம். தைராய்டு கோளாறுகள் உள்ளவர்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைச் சீராகப் பராமரிக்கத் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்// -கூகுள் AI 

புதன், 26 நவம்பர், 2025

'மசுரு' விதி!

டி மின்னலுடன் மழை பொழிகிறது. தன் இருப்பிடத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறான்.  சக்தி வாய்ந்த மின்னல் பளீரிட, அவன் பார்வை பறி போகிறத

பேய் மழையின்போது, மிதி வண்டியில் செல்கிற ஒருவன், வேரோடு சாய்ந்த ஒரு மரத்தடியில் சிக்கி உயிரிழக்கிறான்.

மின்னல் அடிக்கும்போது ஆறறிவுள்ள ஒரு மனிதன், தன் இருப்பிடத்திலிருந்து போதிய பாதுகாப்பின்றி ஏன் வெளியே வரவேண்டும்? மின்னலால் ஏற்படும் அபாயத்தை அவன் அறியாதவனா? அறிந்திருந்தும் தவறிழைத்துத் தன் பார்வையை அவன் பறி கொடுத்தான் என்றால், அதற்குக் காரணம் ’விதி’ என்கிறோம்.

பருவ காலங்களில் மழை பெய்வதும், இடிப்பதும், மின்னுவதும் இயற்கை. இடம் விட்டு இடம் பெயர்வது மனிதனுக்குள்ள செயல்பாடுகளில் ஒன்று. அது இயற்கையாக நிகழ்வது. இது மனித மூளையால் செயல்படுத்தப்படுவது.

மின்னலடித்ததும், ஒருவன் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்ததும் இரு வேறு நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. அவ்வளவுதான். மின்னலடித்தபோது ஒருவன் வெளியில் வந்ததோ அல்லது, அவன் வெளியே வந்த அதே கணங்களில் மின்னல் பளிச்சிட்டதோ முழுக்க முழுக்கத் தற்செயல் நிகழ்ச்சிகள். இங்கே விதி எப்படி நுழைந்தது?
யார் நுழைத்தது?

கடவுளா?

ஒருவன் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக அவன் பார்வையைப் பறிப்பதற்குக் கடவுள் மின்னலைத் தோற்றுவித்தாரா?

ஒரு தனி மனிதனைத் தண்டிப்பதற்காக ஒரு மின்னலா? மின்னலடிக்கும் போது அவன் வெளியே வந்தது கடவுளின் செயலா?

சரியாக மரம் சாய்கிற நேரத்தில் மிதி வண்டிக்காரனை அங்கே கொண்டு சேர்த்ததும் அவர்தானா?

பிரபஞ்ச வெளியில் கோள்கள் ஒன்றோடொன்று மோதி வெடித்துச் சிதறுவது..... எண்ணற்ற கடல் கொந்தளிப்புகளால் அவற்றில் இடம் பெற்ற பொருள்களும் உயிர்களும் தம்முள் மோதிக் கொள்வது.... காற்று, நெருப்பு போன்றவற்றின் அசுரத்தனமான செயல்பாடுகளால் பொருள்களும் உயிர்களும் அலைக்கழிக்கப்பட்டுத் தம்முள் இடிபடுவது என்றிப்படி 'வெளி’யில் இடம்பெறும் விபத்துகள் எண்ணில் அடங்காதவை.

இவை எல்லாமே கடவுளால் உருவாக்கப்பட்ட ‘விதி’ காரணமாக நடை பெறுகின்றனவா?

அளவிடற்கரிய அண்டவெளியில் இடம்பெற்ற அத்தனை பொருள்களும் உயிர்களும் விதிக்கப்பட்டபடிதான் தோன்றி இயங்கி மறைகின்றனவா?

ஒரு மரம் எப்போது எப்படி, எங்கே முளைக்க வேண்டும்? எவ்வளவு காலத்துக்கு, எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டு வளர வேண்டும். எம்முறையில் அழிய வேண்டும் என அந்த மரம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அந்த மரத்திலேயே எழுதி வைக்கப்படுகின்றனவா?

அத்தனை மரங்களுக்குமா? புல், பூண்டு, தூசு, தும்பு, அணு, அணுப்புள்ளி என்று எல்லாவற்றுக்குமா? 

ஏதேனும் ஒரு விலங்கின் தலையில் உருக்கொண்டு, தோன்றி, வளர்ந்து, உதிர்கின்ற 'மயிருக்கும்’கூட தலை எழுத்து உண்டா? 

இவ்வாறாக எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளுக்குச் சரியான விடை அறிந்து சொன்னவர் எவருமில்லை.

சொல்லப்படும் பதில்கள் எல்லாம் அனுமானங்களே. 

அனுமானங்களைப் பதில் ஆக்குவதும், அவற்றை ‘உண்மை’ என நம்ப வைப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்று ஒத்துக் கொள்வது பெருந்தன்மை.

விதி மீதான நம்பிக்கைதான் அடுக்கடுக்கான மூடநம்பிக்கைகளுக்கு மனிதன் அடிமையாகக் காரணமாக அமைந்தது என்பதை நாம் மறத்தலாகாது.

மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும், நோய், பகைமை, வறுமை, நிலையாமை போன்றவற்றால் விளையும் துன்பங்கள் அளவிடற்கரியவை.

அத்துன்பங்களைப் போக்கி, அமைதியாக..... இன்பமாக வாழ்வதற்கான வழி வகைகளைக் கண்டறிய இந்த அறிவு பயன்பட வேண்டும்; கடவுள், விதி, தலை எழுத்து என்று ஏதேதோ சொல்லி, அவை பற்றிக் கற்பனைக் கதைகள் படைத்து, பொய்கள் பரப்பி இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பதற்கு அல்ல.

செவ்வாய், 25 நவம்பர், 2025

ராமர் ‘கைவசம்’ இருக்க 2047வரை காத்திருப்பது தேவையா மோடி?!

த்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசினாராம். என்னவெல்லாம் பேசினார்[+ நம் விமர்சனம்]?*

மோடி: அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஒட்டு மொத்தத் தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளன.....

நாம்: உலக மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் பக்தி இல்லாதவர்களாகவும், ராமன் அல்லாத சாமி பக்தர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த ராமனடிமைக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கய்யா.

மோடி: அயோத்தியில் இன்று காவிக் கொடி ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாச்சார அடையாளம்.

நாம்: ராம பக்தர்கள் என்னும் ஒரு மிகச் சிறுபான்மைக் கும்பலில் கலாச்சார அடையாளமே தவிர, பல்வேறு இனத்தவரையும் மதத்தவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் கலாச்சார அடையாளம் அல்ல இது. இந்த உண்மையைக்கூட அறியாத தற்குறிதான் இந்த இந்தியாவின் பிரதமர்.

மோடி: வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது......

நாம்: பொய்களை மட்டுமே பரப்பி ஒரு நபர்[மோடி] அப்பாவி முட்டாள்களை ஏமாற்றி, தொடர்ந்து இந்த நாட்டை ஆள முடியும் என்பதைக் காட்டுகிறது இக்கொடி.

மோடி: கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர்.


நாம்: ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்த லட்சணத்தைக் கீழே இடம்பெற்றுள்ள ஆதாரபூர்வமானதொரு பட்டியல் மூலம் அறியலாம்***


மோடி: நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.


நாம்: எப்போதும் இவர்[மோடி] ‘கைவசம்’ ராமச்சந்திர மூர்த்தி இருக்கையில், இன்னும் 20 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவையே இல்லை[இவருக்கு வாக்களிக்கும் களிமண்டையர்கள் மூளையில் இதெல்லாம் உறைக்குமா?].


*https://www.dinamalar.com/news/india-tamil-news/pm-modi-ayodhya-visit-this-flag-represents-the-resurgence-of-indian-civilisation-says-pm-modi/4091708


***நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள முன்னணி மாநிலங்கள்:

பீகார்[முதலிடம்]. அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட்[2ஆம் இடம்]: 35 விழுக்காடு.

மேகாலயா[3ஆம் இடம்]: 32.4 சதவீதம்.

உத்தரப்பிரதேசம்[4ஆம் இடம்]: 26.3 விழுக்காடு.

மத்திய பிரதேசம்[5ஆம் இடம்]: 25.3 விழுக்காடு.

https://www.puthiyathalaimurai.com/india/poverty-line-in-india

திங்கள், 24 நவம்பர், 2025

“இந்துக்கள் இல்லையென்றால் உலகம் அழியும்”... ஞானி மோகன் பகவத்!!!

னித நாகரிகம் என்பது மாற்றங்களுக்கு உள்ளாவது.

பழைய நாகரிகங்கள், காலவெள்ளத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகிப் புதிய நாகரிகங்களாக உருவாவது இயற்கை.

மனிதர்கள் ஓர் இனத்தை[மனித இனம்]ச் சார்ந்தவர்கள் ஆயினும், அவர்கள் வாழும் நாட்டுச் சூழ்நிலைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அவர்களின் நாகரிகமும் மாறுபடும்; அழிதலும் நிகழும்.

மாறுதலுக்கு உள்ளாகாத, அல்லது அழியாத மனித நாகரிகம் என்று எதுவும் இல்லை. இந்தியா என்னும் நிலப்பகுதியில்[ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே இந்தியா என்றொரு நாடு உருவானது. ‘பாரதம்’ என்னும் பெயரில் ஒரு நாடு இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை] நிலவிய வேறு வேறு நாகரிகங்களும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல.

வேறு வேறு நாகரிகங்களை உள்ளடக்கிய இந்திய மண்ணில், ‘இந்துச் சமூகம்’ என்ற ஒன்று என்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை. பல்வேறு இனங்கள் மட்டுமே உள்ளன.

இஸ்லாம், கிறித்துவம் போன்ற மதச் சார்புடையவர்களை ஒதுக்கி, எஞ்சியுள்ளவர்களை[பல இனத்தவர்] ‘இந்துக்கள்’ ஆக்கியவர்கள் இந்து ஆதிக்க வெறியர்கள்.

வரலாறு இதுவாக இருக்க.....

“மணிப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முக்காலமும் அறிந்த ஞானி மோகன் பாகவத், “..... யுனான்(கிரீஸ்), மிஸ்ர்(எகிப்து), ரோம் என அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. நமது நாகரீகத்தில் ஏதோ[?] உள்ளது, அதனால்தான் நாம் இன்னமும் இங்கே இருக்கிறோம்” என்று அருளுரை ஆற்றியிருக்கிறார்.

ஏதோ ஒன்று இருக்கிறதாம். அந்த ஏதோ ஒன்று எது? அது இந்துமத வெறி.

மேலும், “பாரதம் என்பது அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால் இந்துச் சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்துச் சமூகம் மையமானது” என்றும் கதையளந்திருக்கிறார்.

உலகின் தோற்றம் குறித்த உண்மை அறியப்படாதது போலவே, இதன் அழிவு எப்போது நிகழும் என்பதும், அது எவ்வகையானதாக இருக்கும் என்பதும் எவருக்கும்[விஞ்ஞானிகள் உட்பட] தெரியாது. அழிவு நிகழுமாயின், இந்துச் சமூகமோ விந்துச் சமூகமோ வேறு எந்தச் சமூகமோ எதனாலும் உலகை நிலைநிறுத்த இயலாது.

‘ஆர் எஸ் எஸ்’ என்னும் கும்பலின் ஆதிக்கம் நீடித்தால், உலகம் அழிகிறதோ அல்லவோ, இந்து மதம் அழியும் என்று வேண்டுமானால் உறுதிபடச் சொல்லலாம்.

https://www.hindutamil.in/news/india/without-hindus-world-will-not-exist-rss-chief-mohan-bhagwats-bold-claim

ஞாயிறு, 23 நவம்பர், 2025

எத்தனைப் பிணங்கள் விழுந்தால் இந்தி வெறியன்கள் திருந்துவான்கள்?!

கீழே உள்ள காணொலியில் இடம்பெறும் துக்க நிகழ்வு  மும்பையில்[மகாராஷ்ட்ரா] இடம்பெற்ற ஒன்று.

ரயில் பயணத்தின்போது, இந்தியில் பேசியதற்காக 19 வயது மாணவன் பிற பயணிகளால் தாக்கப்பட்டுள்ளான். இதைப் பெரிய அவமானமாகக் கருதிய அந்த மாணவன், வீடு திரும்பிய பிறகு, தன் தந்தையிடம் தான் பட்ட அவமானத்தைச் சொன்னதோடு தற்கொலை செய்துகொள்கிறான்[கூடுதல் செய்திகள் காணொலியில்].


இத்தனை இளம் வயதில் இவன் தற்கொலை புரிந்தது பெரும் துயரச் சம்பவம் என்றாலும், இதற்கு மூல காரணமானவன்கள் இந்தி வெறியன்களே என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

அங்கிங்கெனாதபடி, இந்தியா முழுதும் பெருமளவில் இந்தியைத் திணித்துவிட்ட இந்த வெறியன்கள்[இந்தி 42% மக்கள் பேசும் மொழி என்று சிறுபான்மையினர் பேசும் மொழிகளையும் சேர்த்துப் பொய்க் கணக்குக் காட்டியுள்ளான்கள். இந்தி பேசுவோர் 26 கோடி மட்டுமே] முழுமையாகத் திணித்திட முனைப்புடன் செயல்படுகிறான்கள்.

மும்பை மராட்டிய மாநிலத்தின் தலைநகர். ‘தங்கள் தாய்மொழியே[மராட்டிய மொழி] மும்பை உட்பட மகாராஷ்ட்ரா முழுதும் ஆதிக்கம் செலுத்திட வேண்டும்’ என்று அவர்கள் ஆசைப்படுவதில் தவறே இல்லை; அது அவர்களுக்கான உரிமையும்கூட.

இந்த உரிமையைப் பெற்றிட அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில்தான், ரயில் பயணத்தில் இந்தியில் பேசிய மாணவனைக் கண்டித்துத் தாக்கியிருக்கிறார்கள் பயணிகள்.

இது 100% தவறுதான் என்றாலும், இதற்குத் தூண்டுதலாக அமைந்தது, இந்தி வெறியன்கள் ஏற்கனவே மும்பை எங்கும் இந்தியைப் திணித்திருப்பதுதான்.

இன்றளவில் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் மராட்டியர்கள்.

தீரத்துடன் போராடி இந்தியை விரட்டியடிக்க அம்மக்கள் முனைப்புடன் செயல்படும் சூழ்நிலையில்தான்,  இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.

அவசர நடவடிக்கையாக, ஒன்றிய அரசுச் சார்பான நிறுவனங்களில்[அஞ்சல் துறை, ரெயில்வே, ஆயுள் காப்பீடு போன்றவறில்] இந்தி அகற்றப்பட்டு, மாநில மொழிகளும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெறுதல் அவசியம்.

இந்தி வெறியன்கள் இனியேனும் தங்களைத் திருத்திக்கொள்ளாவிட்டால், இவன்களால் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குப் பெரும் கேடு விளையும் என்பது உறுதி.

சனி, 22 நவம்பர், 2025

கிறங்கடிக்கும் இசை மேதை ரஹ்மானின் கலங்கடிக்கும் ‘சூபித்துவம்’ தத்துவம்!

ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்திய யூட்யூப் பாட்காஸ்ட் ஒன்றில் மதங்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் எல்லா மதங்களுக்கும் ரசிகன். இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைப் படித்திருக்கிறேன்...” -இது ‘நக்கீரன்’ செய்தி*

இஸ்லாமியரான இந்த இசை மேதை, அனைத்து மதம் சார்ந்த மக்களின் ஆதரவைப் பெற்றிட மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். இதில் விமர்சிக்க ஏதுமில்லை.

தொடர்ந்து, “சூஃபித்துவம் என்பது இறப்பதற்கு முன் இறப்பது போன்றது. உங்களைச் சுயமாகச் சிந்திக்க வைக்கும் திரைகள் இருக்கின்றன. அந்தத் திரைகளை அகற்ற, நீங்கள் அழிந்துவிட வேண்டும். காமம், பேராசை, பொறாமை அல்லது தீர்ப்புவாதம்[?] அனைத்தும் இறக்க வேண்டும். உங்கள் ஈகோ போய்விட்டால், பின்னர் நீங்கள் கடவுளைப் போல வெளிப்படையானவராக மாறுவீர்கள்” என்றும் பேசியிருக்கிறார்.

இசையரசரே,

‘’இறப்பது’ என்றால் எல்லோருக்கும் தெரியும். அதென்னய்யா இறப்பதற்கு முன்பு இறப்பது?

மனிதராகப் பிறந்த அத்தனைப் பேருமே ஒரு முறைதான் இறக்கிறார்கள். அந்த ஒரு முறை இறப்பின்போதே ஒட்டுமொத்த உடம்பும் மிச்சம் தொச்சம் என்று எதுவும் இல்லாமல் முற்றிலுமாய் அழிந்துபோகிறது.

மீண்டும் சொல்கிறோம்... இறப்பது என்பது ஒரே ஒரு தடவை மட்டுமே முழு உடம்பும் அழிந்துபோகிற ஒரு நிகழ்வு.

அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு ஒரு முறை இறந்து காட்டுங்கள் என்கிறீரே, சொல்லுகிற நீர் மட்டுமல்லாமல், சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற[+வாசித்துக்கொண்டிருக்கிற] அத்தனைப் பேருமே முழுப் பைத்தியங்களா?

இறக்கும் முன்பு இறப்பதென்பது[திரை நரை என்று ஏதோ குறுக்கே இருப்பதாக உளறியிருந்தாலும்] காமம், ஆசாபாசம், பொறாமை போன்ற அனைத்தையும் துறந்து, உணர்ச்சியற்ற சவம் போல ஆவது என்றும் சொல்லியிருக்கிறீர்.

இது நடைமுறைச் சாத்தியமே இல்லாத ‘கற்பனா வாதம்’. இதைப் பேசுகிற சில மதங்களைப் போன்றதுதான் எங்களின் இஸ்லாம் மதமும் என்பதை உங்களின் இந்தப் பேச்சின் மூலம் உலகறியச் செய்திருக்கிறீர்.

மேலும், கடவுளைப் போல ஆகலாம் என்கிறீர். அப்படி ஆனவர்களுக்கான பட்டியலை எவரேனும் தந்திருக்கிறார்களா?[இதைக் கேட்பதற்கான காரணம், சூபித்துவம் மூலம் அடியேனுக்கும் கடவுளைப் போல ஆக வேண்டும் என்னும் ஆசைதான். ஹி... ஹி... ஹி!!!].

ரஹ்மானே,

அற்புதமானதொரு இசையமைப்பாளர் என்னும் முறையில் உலகளவில் பிரபலமானவராக உள்ள நீர், இனியும் இம்மாதிரிப் பித்துக்குளித்தனமாக ஏதும் உளறி வைக்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

வேண்டுகோள்தான்; அறிவுரையல்ல.

https://www.nakkheeran.in/cinema/ar-rahman-about-releigion-10801760*

வெள்ளி, 21 நவம்பர், 2025

‘பெண்’ஐப் பெற்றவர்களுக்கான ‘பகீர்’ப் பதிவு!!!

வள் பெயர் ‘ஜுன்கோ ஃபுருடா’; ஜப்பானியப் பள்ளி மாணவி.  

இவள் தன்னைக் காதலித்த வகுப்புத் தோழன் ‘ஹிரோஷி மியானோ’ என்பவனை நிராகரித்ததால், அவனும் அவன் நண்பர்களும்[3 மாணவர்கள்] இவளை அவர்களில் ஒருவன் வீட்டிற்குக் கடத்திச் சிறை வைத்தார்கள்[கடத்தப்பட்டது 100க்கும் மேற்பட்டோருக்குத் தெரிந்திருந்தும் எவரும் உதவவில்லை].

நான்கு பேரும் ஜுன்கோவை இடைவிடாமல் சித்திரவதை செய்தனர், 

வதைகள்:

*நிர்வாணப்படுத்தப்பட்டாள்.

*சுய இன்பம் அனுபவிக்கச் செய்தார்கள்.

*அவள் மீது சிறுநீர் கழித்தார்கள்.

*அவளை அவளுடைய சிறுநீரையே குடிக்க வைத்தார்கள்.

*தரைவிரிப்பு[கம்பளம்] சிறுநீரில் நனைந்ததால் அவளை அடித்து உதைத்தார்கள்.

*அவளின் முகம் வீங்கியது.

*40 நாட்கள் 400 முறைகளுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.

*100க்கும் மேற்பட்ட பிற ஆடவர்களும் அவளை வன்புணர்வு செய்தார்கள்.

*அவளின் யோனி இரும்புக் கம்பிகள், கத்தரிக்கோல், ஊசிகள், சூலங்கள் போன்றவற்றால் சிதைக்கப்பட்டது.

*யோனிக்குள்ளும் ஆசனவாய்க்குள்ளும் பல்புகள், பட்டாசுகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை திணிக்கப்பட்டன.

*மார்பகங்கள் தையல் ஊசிகளால் துளைக்கப்பட்டன.

*மார்புக் காம்புகள் குத்திக் கிழிக்கப்பட்டன.

*நிர்வாணமாகக் கட்டாந்தரையில் கிடத்தப்பட்டுக் குளிரில் நடுங்கி உருக்குலைந்தாள் இவள்.

*மேலும் பலவகையாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கடத்தப்பட்ட  40ஆவது நாளில்[ஜனவரி 4, 1989] தீயிட்டு எரிக்கப்பட்டாள்.

இவ்வாறாக,  ‘ஜுன்கோ ஃபுருடா’ சாம்பலான பிறகே, கொடூர மிருகங்களான 4 மாணவர்களையும் கைது செய்தது ஜப்பான் நாட்டுக் காவல்துறை.

குற்றவாளிகளில் ஹிரோஷிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற முக்கியக் குற்றவாளிகளுக்குத் தலா 5-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை தரப்பட்டது. 

தூக்கில் தொங்கவேண்டிய கயவர்கள் 17-18 வயதுடையவர்கள் என்பதால் தப்பிப் பிழைத்தார்கள்.

                                    *   *   *   *   *

“Who had the worst death in history?” என்று  ‘Quora’வில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மேற்கண்ட கொடூர நிகழ்வைப் பதிலாக வழங்கிய Daniel Claydon’[ https://www.quora.com/Who-had-the-worst-death-in-history] அவர்களுக்கு நம் நன்றி.

வியாழன், 20 நவம்பர், 2025

“தமிழ் தெரியவில்லையே”... துயரத்தின் அடிமட்டம் தொட்ட நரேந்திர மோடி!!!

//கோவை : நவம்பர் 19, 2025 அன்று நடைபெற்ற ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு’ & ‘தென்னிந்திய இயற்கை விவசாயச் சிகர மாநாடு 2025’-இல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழில் “வணக்கம்” என்று தொடங்கிய அவர், “சிறு வயதிலேயே தமிழ் கற்றிருந்தால் உங்களுடன் தமிழிலேயே பேசியிருப்பேன்” என்று கூறி அரங்கத்தை மகிழ்வித்தார்// -செய்தி.

தமிழன்: “பிரதமர் ஆன பிறகு கற்றிருக்கலாமே? இந்தி கற்க நேரம் இருந்தது; இதற்கு இல்லையா பிரதமருக்கு?”

//மேலும், தமிழக விவசாயிகளின் உற்சாக வரவேற்பைப் பார்த்து “பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ?” என்று குறிப்பிட்டார்// -செய்தி.

தமிழன்: “வீசுது. சகிக்க முடியாத சாக்கடை நாற்றம் கலந்த காற்று அது!

//மாநாட்டில் தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தமிழில் உரையாற்றினார். பிரதமர் மோடி, “தமிழ் புரியாவிட்டாலும் அவரது உணர்வு எனக்கு முழுமையாகப் புரிந்தது. அந்த உரையை இந்தியில் மொழிபெயர்த்து எனக்கு அனுப்புங்கள்” என்று கேட்டுக்கொண்டார்// -செய்தி.

தமிழன்: “இங்கிலீசில் அனுப்பினால் புரியாதா மோடிக்கு?”

//பிரதமரின் தமிழ் மொழி மீதான அன்பும், இயற்கை வேளாண்மை மீதான ஆர்வமும் அரங்கில் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தியது// -செய்தி.

தமிழன்: “தமிழ் மொழி மீது நரேந்திரருக்கு அன்புள்ளது... சரி. ‘இந்தி & சமஸ்கிருதம்’ மீதான அன்பைவிடவும் இது எத்தனை மடங்கு அதிகம்?! அன்பாம் அன்பு, அரைக் காசு பொறாத அன்பு!”

                                           *   *   *   *   *

https://www.dinasuvadu.com/news/tamilnadu/it-seems-like-the-wind-from-bihar-is-blowing-in-tamil-nadu-too-prime-minister-modis-speech-975033


புதன், 19 நவம்பர், 2025

கோவை நிகழ்ச்சி... அடிமை எடப்பாடியை முதலாளி மோடி சந்திக்க மறுத்தது ஏன்?!

 

மிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோதாகட்டும், ‘அதிமுக’ என்னும் பெரியதொரு கட்சியின் தலைவராக இன்றளவில் இருக்கும்போதாகட்டும், வாழ்நாளில் மிகப் பெரும் பகுதியை உலகம் சுற்றிக் குதூகளிப்பதில் கழிக்கிற இந்தியப் பிரதமர் மோடிக்கு,  விசுவாசமுள்ள நிரந்தரக் கொத்தடிமையாகச் சேவகம் செய்யத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் எடப்பாடிப் பழனிசாமி.

இது மோடிக்குத் தெரியும்; ‘அதிமுக’வின் ஆதரவு இல்லாமல் சில ஆயிரம் வாக்குகள்கூடத் தமிழ்நாட்டுத் தேர்தல்களில் பெற்றிட இயலாது என்பதையும் அவர் அறிவார்.

இந்நிலையில், மரியாதை நிமித்தமாகவும், மோடியிடம்[கோவை நிகழ்ச்சியில்] தனக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்வதற்காகவும் அவருடன் தனியாகப் பேசும் தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

அரசியல் ஞானி மோடியோ அதற்கு இசைவு தரவில்லை என்பது ஊடகச் செய்தி.

சந்திக்க மறுத்ததன் மூலம்.....

“ஓ எடப்பாடி, அகில உலகப் பிரபலம் நான். நீ என் ஆயுட்கால அடிமை. உலகறிய, அடிமையாகிய நீயும் முதலாளியான நானும் தனிமையில் சந்தித்துப் பேசினால்[மோடி வேறு எவரையும் தனிமையில் சந்திக்காத நிலையில்], நீ எனக்குச் சமானமானவன் என்றாகிவிடும். இதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூட உனக்கு இல்லை” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மோடி.

மோடி புத்திசாலி! எடப்பாடி?

செவ்வாய், 18 நவம்பர், 2025

‘ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி’ என்றொரு கருமாந்தர நோய்!!!

தயத்தின் இரண்டு கீழ் அறைகளுக்கு இடையிலான சுவர் ‘செப்டம்’ என்று அழைக்கப்படுகிறது[அறைகள் வென்ட்ரிக்கிள்கள் என்று அழைக்கப்படுகின்றன]. இந்தச் சுவர்[செப்டம்] சில நேரங்களில் தடிமனாகிவிடுவதுண்டு. இதனால், இதயத்தின் இரத்த ஓட்டம் தடைபடும். இது ‘ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி’[Hypertrophic Cardiomyopathy] என்று அழைக்கப்படும் ஒரு வகை இதய நோய் ஆகும்.

இதன் அறிகுறிகள்:

உடற்பயிற்சியின்போதும், சில நேரங்களில் கடினமான உடல் இயக்கத்தின்போதும் மயக்கம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படக்கூடும்.

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி காரணமாக, இதயத்தின் முக்கிய பம்பிங் அறையான இடது வென்ட்ரிக்கிள் விறைத்து இதயம் ஓய்வெடுப்பதைக் கடினமாக்குகிறது; சீரான ரத்த ஓட்டம் பாதிக்கிறது.

இது 50% மரபும் காரணமாக இருக்கலாம். திடீர் மரணம் ஏற்படவும் இந்நோய் காரணமாக அமையலாம்.

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதியை(HCM)த் தடுப்பதற்குச் சிகிச்சை ஏதும் இல்லை[இப்போதைக்கு] என்பது அறியத்தக்கதொரு சோகச் செய்தி.

* * * * *

***இப்பதிவுக்கு ஆதாரமாக அமைந்த கட்டுரை[ஆங்கிலம்], வடிவமைப்பு, கூறியது கூறல், தெளிவற்ற நடை போன்ற குறைகளை உள்ளடக்கியது. தமிழாக்கம் செய்து நம் மொழி மரபுக்கேற்பச் சீர் செய்து வெளியிடப்பட்டுள்ளது இது என்பதைக் கவனத்தில் கொள்க.

திங்கள், 17 நவம்பர், 2025

ஐயப்பனைப் போற்றி, சாத்தானைப் புறக்கணிக்கும் அப்பாவிப் பக்தர்கள்!!!

//கேரளாவில் மூளையைப் பாதிக்கும் அமீபா தொற்று பரவி வருவதால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பாதுகாத்துக்கொள்ளுதல் வேண்டும் என கேரளச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது// -https://tamil.news18.com/photogallery/spiritual/warning-to-sabarimala-devotees-about-amoeba-infection-risk-nw-asg-ws-l-1971548.html

41 நாட்கள் விரதம் இருந்து, முடி திருத்துதல் சவரம் செய்தல் போன்றவற்றத் துறந்து, காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து, காரம், புளிப்பு போன்றவற்றைக் குறைத்து குறைவான உணவுண்டு, சொகுசுப் பஞ்சணையைப் புறக்கணித்து பாயில் படுத்துறங்கி, பிறர் மீது ஒட்டாமலும் உரசாமலும் ஒதுங்கியிருந்து, காலணி குடை போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துத் துளசி, பால், பழங்கள் போன்றவற்றை வைத்து, 108 முறை சரணம்[“சாமியே சரணம் ஐயப்பா”] சொல்லி ஐயப்பக் கடவுளை வழிபடுகிறார்கள் அவருடைய பக்தர்கள்.

இதன் மூலம் அவரிடம் வைக்கும் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவதோடு, நோய்நொடிகளிலிருந்து தங்களை அவர் காப்பாற்றுவதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள்.

கடந்தக் காலங்களில் எப்படியோ, அண்மைக் காலங்களில், கேரள அரசு எச்சரிக்கும் அளவுக்கு, அதி முக்கிய உறுப்பான மூளையை செயலிழக்கச் செய்கிறது ‘அமீபா’ தொற்று என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பக்தர்கள் பலர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்தக் கொடிய அமீபாவின் தாக்குதலைச் சர்வ வல்லமை படைத்த ஐயப்பனால் தடுக்க இயலாமல்போனது ஏன் என்று எழும் கேள்வி தவிர்க்க இயலாதது.

காரணம் என்று நாம் கருதுவது, ஐயப்பனைவிடவும் அதீத ஆற்றல் வாய்க்கப்பெற்ற சாத்தானின் படைப்பான அமீபா கிருமியை ஐயப்பனால் அழிக்க இயலாது[உயிர்கள் அனுபவிக்கும் இன்பங்களைவிடவும் துன்பங்களே அதிகம். அவற்றை வழங்கி உயிர்களைத் துன்புறுத்துபவர் சாத்தான்; கருணைக் கடவுள் அதைச் செய்யமாட்டார் என்பதைக் கருத்தில் கொள்க] என்பதே.

ஆகவே,  சபரிமலை செல்லுகையில் ஐயப்பனை வழிபடும்போதே, ஐயப்பனைவிடவும் அதிக அளவில் சக்தி[அழிக்கும் சக்தி] வாய்ந்த சாத்தானை வழிபட்டுப் புனிதப் பயணம் மேற்கொள்வது தவிர்க்கவே கூடாதது என்பதை ஐயப்பப் பக்தர்கள் அறிந்து செயல்படுவார்களாக!

சாமியே சரணம் ஐயப்பா!

                                         *   *   *   *   *

***ஐயப்பப் பக்தர்களுக்கான இந்தப் பரிந்துரை, பிற கடவுள் பக்தர்களுக்கும் பொருந்தும்.