எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 1 நவம்பர், 2025

விஜய்க்கு[சாவு 41]க் கண்டனம்! வெங்கடேஸ்வரனுக்கு[சாவு 9]க் காணிக்கையா?!

கரூரில் நடிகர் விஜய் நடத்திய ஊர்வலத்தின்போது, கூட்ட நெரிசலில் முட்டி மோதி, விழுந்து மிதிபட்டு 41 பைத்தியங்கள் உயிரிழந்தன.

அதற்கு எவரெவரெல்லாமோ[பிரபல வலைப்பதிவர் ‘பசி’பரமசிவம் உட்பட!!!] கண்டனம் தெரிவித்து நடிகரை நிந்தித்தார்கள்[தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு].

செய்வதறியாது ஓடி ஒளிந்து, சற்றே மனம் தேறி, பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களின் கால்களைக் கண்ணீரால் கழுவி, அவர்கள் ஆறுதல் பெறும் வகையில் நிதியுதவியும் செய்தார் மானுடனான விஜய்.

நேற்று அதே போன்றதொரு அசம்பாவிதம்* நிகழ்ந்துள்ளது.

இந்நாள்வரை எவர் கண்ணுக்குத் தட்டுப்படாதவரான[பொன்னாலும் வைர வைடூரியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிலைக்குள் இருப்பவர்] ஸ்ரீகாக்குளம் மாவட்ட காசிபுக்க வெங்கடேஸ்வர சாமி என்பவரைத் தரிசிக்க கூட்டம் கூட்டமாகச் சென்று, நெரிசலில் மிதிபட்டுப் பலர் படுகாயம் அடைந்த நிலையில், 9 பக்தர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்[தப்பிப் பிழைத்தவர்கள் பணக் கட்டுகளை உண்டியலில் காணிக்கையாக்கினார்கள்].

நடிகர் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்த நீதிமான்களில் எவரொருவரும் வெங்கடேஸ்வரனுக்குக் கண்டனம் தெரிவித்ததாக அறியப்படவில்லை.

நம் கேள்வி:

பக்திமான்களே, இல்லாத சாமி மீது உங்களுக்கு இத்தனைப் பயமா?! நீங்கள் சிந்திக்கக் கற்பது எப்போது?

* * * * *

*https://tamil.news18.com/national/srikakulam-venkateswara-swami-temple-crowd-crush-9-dead-vjr-ws-l-1959061.html -November 01, 2025