எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 2 நவம்பர், 2025

வடக்கன்களை விரட்டுவதற்கு வழிகாட்டிய மோடி!!!

யிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பீகாரிகளைத் ‘தி.மு.க.’வினர் துன்புறுத்துவதாக மோடி அபாண்டப் பழி சுமத்தியதைத் தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

மோடியின் இந்த அண்டப் புளுகு கண்டிக்கத்தக்கது என்றாலும், ஆயிரக்கணக்கில் வந்து குவியும் வடக்கன்களை விரட்டியடிப்பதற்கான வழியறியாமல், விழி பிதுங்கித் தவிக்கும் தமிழர்களுக்கு அவர் வழிகாட்டியிருக்கிறார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

இந்தப் பொய்யின் மூலம் நடைபெறவுள்ள பீகார்த் தேர்தலில் பீகாரிகளின் வாக்குகளை அள்ளுவதுதான் அவர் நோக்கமே தவிர தமிழ்நாட்டிலுள்ள வடபுலத்துத் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை என்பதால்[இருந்திருந்தால் தமிழ்நாடு அரசின் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்].....

வடதிசையிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாடு வருபவர்களை[வருங்காலத்தில் வாக்குரிமை பெற்றுத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவார்கள்]க் கொஞ்சமும் தயங்காமல் துன்புறுத்துவதற்கு மோடி வழிகாட்டியதோடு, அதற்கு அனுமதியும் வழங்கியிருக்கிறார் என்பது பலரும் அறியாத உண்மை.

வாழ்க மோடி! வளர்க அவரின் உலகளாவிய புகழ்!!