‘பெண்களுக்கு...’ என்பதை, ‘மிகச் சில பெண்களுக்கு...’ என்று திருத்தி வாசித்திடுக!
தலைப்பு: தினவு
படைப்பு: ‘கத்துக்குட்டி’ பரமசிவம்
“மல்லிகா, எங்கடி போய்ட்டு வர்றே?”
வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.
“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.
“இல்ல, அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைக் குளியலறையிலிருந்து கேட்டேன்."
மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.
“புருஷனைத் தவிர வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”
“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ‘அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” - அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.
மனதைத் தேற்றிக்கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு.
சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன். நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. ஆனா நீ.....
புருஷன் இருக்கும்போதே, அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே. இதோ பாருடி.... மற்றதில் எப்படியோ, ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும், இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்’னு தினவெடுத்துத் திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா.”
“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.
=============================================================================================
| முற்பகல் 11:20 (4 நிமிடத்திற்கு முன்) | |||
நன்றி செல்வக்குமார்.
பின்னூட்ட வசதி செய்வதில் பிரச்சினை ஏதுமில்லை. பிரச்சினைக்குரிய[கடவுள்...மதங் கள்...] பதிவுகளுக்கு வரும் கண்டனங்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவம் எனக்கில்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறேன்; நேரமும் விரயமாகிறது.
என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதும் ஒரு காரணம்.
எவரையும் அலட்சியப்படுத்தும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
மீண்டும் நன்றி செல்வக்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக