“மூடநம்பிக்கை மீதான நம்பிக்கை எனக்குச் சிறு வயதிலிருந்தே இல்லை. நல்ல நேரம் பார்த்து என் திருமண நாள் [முகூர்த்தம்] நிச்சயிக்கப்பட்டது என்றாலும், நான் தாலி கட்டியது என்னவோ ராகுகாலத்தில்தான்” [தினகரன், 02.05.2016] என்று சொல்லியிருப்பவர் நம் அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள்.
"சாம்ராஜ் நகருக்குச் சென்றால் பதவியை இழந்துவிடுவேன் என்று கூறினார்கள். கடந்த காலங்களில் ஆறு முறை அங்கே சென்றுள்ளேன். மூன்றாண்டுகளாக முதல்வர் பதவியில் தொடர்கிறேன். எஞ்சியுள்ள இரண்டாண்டுகளும் பதவியில் நீடிப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார் சித்தராமையா.
தம் நெஞ்சில் மூடத்தனங்களுக்குக் கிஞ்சித்தும் இடம் தராத கர்நாடக முதல்வர், மக்கள் மனங்களிலிருந்தும் அவற்றை முற்றிலுமாய் அகற்ற்றிடவும் முடிவெடுத்திருக்கிறார்.
அதன் பொருட்டு, ‘மூடநம்பிக்கைக்கு எதிரான வலிமையான தடைச்சட்டம் கொண்டுவரப்படும்’ என்றும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதிபடக் கூறியிருக்கிறார்; மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைத் தடைச் சட்டம் அமலில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதன் பொருட்டு, ‘மூடநம்பிக்கைக்கு எதிரான வலிமையான தடைச்சட்டம் கொண்டுவரப்படும்’ என்றும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதிபடக் கூறியிருக்கிறார்; மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைத் தடைச் சட்டம் அமலில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தலைமைச் செயலகம் கட்டுவதற்கு[அது, மதச் சார்பற்ற ஓர் அரசின் உடைமை என்பதை மறந்து] வாஸ்து பார்க்கும் ‘வாஸ்து அடிமை’யான ஆந்திர முதல்வரையும், வாயுப்பிடிப்புக்கும் வயிற்றுவலிக்கும்கூட ‘யாகம்’ நடத்தும் தமி்ழ்நாடு முதல்வர், தெய்வத்தின் தெய்வம் ‘அம்மா’ அவர்களையும் நோக்க, கர்நாடக முதல்வர் மிகப் பல மடங்கு மேம்பட்டவராகத் தெரிகிறார்.
அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுவோம். அவர்தம் நல்லுணர்வைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்புத் தருவது கர்நாடக மக்களின் தலையாய கடமையாகும்.
===============================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக