பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி உயிர் வாழ்கிறோம்.
ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களுக்கு உணவாகி அழிந்துபோகிறோம்.
போராட்டம் நிறைந்த, பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச் சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம்.
தலைமுறை தலைமுறையாக.....
மனித இனத்தில் மட்டுமன்று, மற்ற உயிரினங்களிலும் இதே நிகழ்வுகள்தான்.
இந்நிகழ்வுகளுக்கெல்லாம் வித்திட்டது எது, எவை, எவர், எவரெல்லாம் என்பனபோன்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடையில்லை. விடை கிடைக்கிறதோ இல்லையோ விடை தேடும் முயற்சியில் மனித இனம் தொடர்ந்து ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இதை மறுத்து, அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுளே என்று எவரும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டாம். அப்படியொருவர் இருந்தால்....
உயிர்களுக்கு நிலையற்ற வாழ்வும் அற்ப சுகங்களும் தந்து அளப்பரிய துன்பங்களில் உழலச் செய்வாரா?
சிந்தியுங்களேன்!
சிந்தியுங்களேன்!
* * *
இப்பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்த ‘ஔவை’யின் பாடலைக் கீழே பதிவு செய்கிறேன். இது உங்களின் சிந்தனையை விரிவுபடுத்துவதாக அமையும் என்பது என் நம்பிக்கை.
‘வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமென்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்’ [துஞ்சுதல் - இறத்தல்]
===============================================================================
அருமையான பகிர்வு நண்பரே
பதிலளிநீக்குபாராட்டுரைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஇது ஒரு வேலைன்னு செய்துகிட்டே இருக்க கிறுக்கா :)
பதிலளிநீக்குநம்மில் மிகப் பெரும்பாலோர் இப்படித்தான் நினைக்கிறார்கள். மிக்க நன்றி பகவான்ஜி.
நீக்குஒரு வாரத்திற்கும் மேலாக வலைப்பக்கம் வர இயலவில்லை பகவான்ஜி.
நல்ல பதிவு.
பதிலளிநீக்கு//உயிர்களுக்கு நிலையற்ற வாழ்வும் அற்ப சுகங்களும் தந்து அளப்பரிய துன்பங்களில் உழலச் செய்வாரா?//
நோய்வாய்படுதல், ஏழ்மை நிலைகளில் தான் கடவுள் பிரசாரத்தை தீவிரமாக்குவார்கள். கடவுளின் கைகளை நீங்க இறுக்க பிடிக்கவில்லை, இறுக்க பிடித்து கொள்ள வேண்டும் என்பார்கள் :)
நன்றி வேகநரி.
நீக்கு