சனி, 22 ஏப்ரல், 2017

‘தீ மிதி’ப்பவன் முட்டாள்! தூண்டுபவன் அடிமுட்டாள்!!

இப்பதிவு, பக்தர்களின் மனங்களைப் புண்படுத்துவதற்காக அல்ல; முட்டாள்களைப் பண்படுத்துவதற்காக.
‘திருவாரூர்: நன்னிலம் அருகே தென்குடி கோயில் ‘தீ மிதி’ விழாவில், நெருப்பில் விழுந்து 36 பக்தர்கள் படுகாயம்’ இன்று காலை, 08.30 மணியளவில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ஒலி/ஒளிபரப்பான செய்தி இது.

தீக்குண்டம் மிதிப்பவர்கள் ஒருவகை மனநோயாளிகள். 

அனல் பறக்கும் தீக்குண்ட நெருப்பில் சில நிமிடங்கள் நிற்பதோ உருண்டு புரண்டு எழுவதோ சாத்தியமில்லை என்பது தீ மிதிப்பவர்களுக்குத் தெரியும். தெரிந்தும், குளித்துமுடித்து ஆடையில் நீர் சொட்டச் சொட்ட,  குழியை ஓடிக் கடப்பது கடவுளின் அருளாசி தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்குப் பக்தர்கள் கையாளும் தந்திரம். [‘தீக்குண்ட{பூக்குழி} நெருப்பு சுடாமலிருப்பது பக்தியினாலா?’ http://kadavulinkadavul.blogspot.com/2017/02/blog-post_52.html என்னும் பதிவைப் படியுங்கள்]

தீண்டினால் சுடுவது நெருப்பின் இயல்பு[சிலவகை மூலிகைச் சாறுகளைப் பூசிக்கொண்டு தொட்டால் சுடுவதில்லை. கொதிக்கும் எண்ணையில் கையை நனைத்து வடை சுடுவதன் சூட்சுமம் இதுதான்].

உண்மை இதுவாக இருக்க, கோயில் திருவிழாக்களில் தீ மிதிக்கும் மூடப்பழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

பக்தகோடிகளின் மனம் புண்படக்கூடாது என்று அறிவுஜீவிகளும் ஆளும் வர்க்கத்தினரும் இந்நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள். விளைவு.....

இதுவும் இதுபோன்ற பல மூடப்பழக்கங்களும் இனியும் நிலைபெறும்; வளர்ச்சியடையும் என்பது திண்ணம்!
===============================================================================




10 கருத்துகள்:

  1. இதை சொன்னா நம்பளை டேஷ்துரோகின்னு சொல்லிடுவாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லட்டும். தண்டனை உண்டென்றாலும் ஏற்கத் தயார். இதெல்லாம் தெரிந்துதானே எழுதுகிறோம்.

      நன்றி ராஜி.

      நீக்கு
  2. நண்பரே நான் விபரம் அறிந்த பிறகு இவைகளை வேடிக்கை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. பால்குடம் எடுக்கையில் சாமி வந்து ஆடுவதும் .. கடவுளின் அருளாசி தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்குப் பக்தர்கள் கையாளும் தந்திரம்தான்:)

    பதிலளிநீக்கு
  4. எனக்கு கடவுள் பக்தி உண்டு... ஆனாலும் பூ இறங்குவதும் வேல் குத்துவதும் எனக்குப் பிடிககாத ஒன்று.....

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் திறந்த கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  5. //பக்தகோடிகளின் மனம் புண்படக்கூடாது என்று அறிவுஜீவிகளும் ஆளும் வர்க்கத்தினரும் இந்நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள். விளைவு.....

    இதுவும் இதுபோன்ற பல மூடப்பழக்கங்களும் இனியும் நிலைபெறும்; வளர்ச்சியடையும் என்பது திண்ணம்!//

    மிகவும் சரியாக சொல்யியுள்ளீர்கள்.அவர்கள் விஷயமில்லாமலா இப்படி எல்லாம் செய்கிறார்கள்!மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க வேண்டும்.காலம் காலமாக முன்னோர்கள் பின்பற்றி வருவதை விட முடியுமா என்று மூடப்பழக்கங்களுக்கு மேலும் ஊக்கமளிப்பார்கள் பலர்,மூடப்பழக்கங்களை பின்பற்றுவது தமிழகத்தின் பெருமைக்குரியதாக நம்புபவர்கள் சிலரும் உள்ளார்கள். வேதனை தான்.

    பதிலளிநீக்கு
  6. அறிவுஜீவிகள் எனப்படுவோரும்கூட இம்மாதிரியான மூடப்பழக்கங்களைக் கண்டிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    நன்றி வேகநரி.

    பதிலளிநீக்கு