‘மாணவர் உலகம், மழலையர் உலகம், குடிமகன்கள் உலகம் போல, இதுவும் ஒரு தனி உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உலக நாடுகள் அனைத்திலும் இவர்களே பெரும்பான்மையினர். எனவே, நாம் வாழும் இந்த உலகையே, ‘மூடர் உலகம்’ என்றழைத்தால் அதில் தவறேதும் இல்லை.
ஒட்டுமொத்த மூடர்களின் எண்ணிக்கை பற்றிய ‘கணக்கெடுப்பு’[Survey] எதுவும் உலக அளவில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அது சாத்தியப்பட்டிருந்தாலும் அதன் நம்பகத்தன்மைக்கு எவரும் உத்தரவாதம் தர இயலாது. காரணம், “நான் மூடன்” என்று மனம் திறந்து சொல்லும் பெருந்தன்மை மனித குலத்தவரில் பலருக்கு இல்லை என்பதுதான்.
இங்கு பெரும்பான்மையினர் அவர்களே என்பது நிரூபிக்கப்படவில்லை எனினும், அது சாத்தியமே என்று நம்புகிறார்கள் ஆய்வுலக அறிஞர்கள்.
"I can't give you a percentage, but I'd say it's pretty high because most of us, whether we admit to it or not, have our own superstitions." [-"percentage of people who believe superstitions" - Yahoo Answer] என்பது ஒரு கருத்து.
"Nobody can give you a percentage, because there are so many different superstitions. Some people don't even realize that they're superstitious." [-Yahoo Answer]
இணையத் தேடலின் மூலம், நாடு வாரியான, குத்துமதிப்பான புள்ளிவிவரங்களை ஆங்காங்கே காண முடிகிறது. அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
1. “.....over 85% of us have at least one superstitious belief.....” [tombola, Britain's biggest bingo site]
2.“I'd say at least 90% of Americans do. Most are Christian (80-87%), and I'm sure there are superstitious folks within the remainder, so round it up to 90." [-Google Search]
3.According to one survey, 80 percent of Chinese visit fortunetellers. [-Google...]
4.[Ipsos MORI and Ben Schott of 'Schott's Almanac' ஆகியோர் நிகழ்த்திய ஆய்வின்படி, இங்கிலாந்தில், ‘விதி’, ’ஆன்மா’ போறவற்றை நம்புவோர் எண்ணிக்கை ஐம்பது விழுக்காட்டைத் தாண்டுகிறது. இவற்றையும், கடவுள். சொர்க்கம், மறுபிறப்பு போன்றவற்றையும் நம்பும் பெண்கள் இங்கே அதிகம்.
5. ஜப்பானில், எண் 4 கேடு தருவதாகப் பலரும் நம்புகிறார்கள். நம்மைப் போலவே அவர்களுக்கும் பூனை குறுக்கிடுதல் கெட்ட சகுனம்!
எது எப்படியோ, முன்பு எப்போதும் இருந்ததைக் காட்டிலும், ஆறாம் அறிவு வளர்ச்சி கண்டிருக்கும் இந்நாளிலும், மூடநம்பிக்கைகளுக்கு இரையாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.[The modern world is seeing an increasing number of people falling prey to irrational beliefs.....http://www.dailymail.co.uk/femail/article-1280741/Are-YOU-ruled-superstition-It-modern-world-driving-mad-irrational-fears-OCD-rise.html#ixzz37LLRLiD]
அரசியல், அறிவியல், சமயம், ஊடகம், இலக்கியம் என்று அனைத்து உயிர்நாடியான துறைகளிலும் மூடநம்பிக்கையார்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. அவர்களைத் திருத்துவதோ திருந்தச் செய்வதோ அத்தனை எளிதான செயலல்ல. தாம் ஈடுபடுவது மூடத்தனமான செய்கைகளில் என்பது தெரிந்திருந்தும், தங்களது கௌரவத்தையும் சமூக அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதே அதற்குக் காரணம்.
6.இந்தியர் நிலை குறித்துச் சொல்லவும் வேண்டுமோ? மூடநம்பிக்கைகளைக் கட்டிக் காப்பதில் இவர்கள் உலகின் நம்பர் 1 என்று சொல்லலாம். ஆனாலும் நம் ஆய்வாளர்கள், 61%, 51% என்றெல்லாம் குறைத்துச் சொல்லி முழுப் பூசணிக்காயைக் கொத்து புரோட்டாவில் மறைக்கிறார்கள்.
எது எப்படியோ, முன்பு எப்போதும் இருந்ததைக் காட்டிலும், ஆறாம் அறிவு வளர்ச்சி கண்டிருக்கும் இந்நாளிலும், மூடநம்பிக்கைகளுக்கு இரையாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.[The modern world is seeing an increasing number of people falling prey to irrational beliefs.....http://www.dailymail.co.uk/femail/article-1280741/Are-YOU-ruled-superstition-It-modern-world-driving-mad-irrational-fears-OCD-rise.html#ixzz37LLRLiD]
அரசியல், அறிவியல், சமயம், ஊடகம், இலக்கியம் என்று அனைத்து உயிர்நாடியான துறைகளிலும் மூடநம்பிக்கையார்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. அவர்களைத் திருத்துவதோ திருந்தச் செய்வதோ அத்தனை எளிதான செயலல்ல. தாம் ஈடுபடுவது மூடத்தனமான செய்கைகளில் என்பது தெரிந்திருந்தும், தங்களது கௌரவத்தையும் சமூக அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதே அதற்குக் காரணம்.
இவ்வுண்மையை, அறியாமையால் மூடத்தனங்களின் பிடியில் சிக்குண்டு அல்லல்படும் எளிய மக்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.
=================================================================================================================