இந்தப் பூமியின் வயசு [The age of the Earth is approximately] 4.54 ± 0.05 billion years (4.54 × 109 years ± 1%).[1][2][3][4 -Wiki] என்று விஞ்ஞானிகள் அடிச்சி
விட்டிருக்காங்க. இது இதனுடைய இப்போதைய வயசு. முழு ஆயுள் இன்னும் அதிகம்.
இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான
அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம்
பொதுவாச் சொல்ல மட்டும்தான் நமக்குத் தெரியும்.
இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான
அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம்
பொதுவாச் சொல்ல மட்டும்தான் நமக்குத் தெரியும்.
பூமியின் ஆயுசு இப்படின்னா, சூரியனுடையது இதைவிடவும் மிகப் பல மடங்கு
[.....This lifespan began roughly 4.6 billion years ago, and will continue for about another 4.5 – 5.5 billionyears] அதிகமாகத்தான் இருக்கும். கொஞ்சம் பொறுமையைக் கடைப்
பிடியுங்க... நான் சொல்ல வர்ற விசயமே வேற.
பிடியுங்க... நான் சொல்ல வர்ற விசயமே வேற.
சூரியனை விடவும் பலப்பல மடங்கு பெருசான நட்சத்திரங்களின் ஆயுசு இன்னும் இன்னும் இன்னும் அதிகம். இதுகளுக்கு அப்பன், முப்பாட்டன் கொள்ளுப் பாட்டன், எள்ளுப்பாட்டன் எல்லாம் இருக்காங்க. அதுகளுடைய ஆயுசையும் கணக்குப் பண்ணிகிட்டுப் பொழுதைக் கழிக்கிறாங்க விஞ்ஞானிங்க.
எல்லார்த்தையும் உள்ளடக்கிய ஒன்னுதான் 'அண்டம்'கிறான். அப்புறம் 'பிரபஞ்சம்'கிறான். 'வெளி'[Space]யில் அவ்வப்போது நிகழ்கிற பெருவெடிப்புகள் காரணமா இதுகளெல்லாம் தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறதுகளாம்.
கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு 'முற்றுப்பெறுதல்' என்பதே இல்லை என்கிறார்கள். முற்றுப்பெறாத இம்மாதிரி நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரபஞ்ச[வெளி]த்தின் ஆயுளோடு மனிதர்களுடைய ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்த்தா.....இவர்களுடைய ஆயுள் அற்பம்...அற்பம்...வெகு அற்பம்... அற்பத்திலும் அற்பம்[துல்லியமாகச் சொல்ல வார்த்தைகள் இல்லை].
மனுசங்க ஆயுள் நூறு[சிலர் கூடக்குறைய வாழலாம்]. அதுல, தூங்கினது, துக்கிச்சது, பொறாமைப்பட்டது, கலகம் பண்ணினதுன்னு விரயம் பண்ணினதையெல்லாம் கழிச்சா, எஞ்சியிருப்பதுதான் அவர்களுடைய ஆயுள்.
அது எவ்வளவு தேறும்?
ஒரு அஞ்சு?..... ஊஹூம். பத்து?..... ஊஹூஹூம்.
ஒரு பத்து ஆண்டுன்னே வைச்சுக்குவோம்.
இந்தப் பத்து ஆண்டுகளை எப்படிக் கழிக்கணும்?
தம்மையும் கவனிச்சிக்கணும். தம்மைச் சார்ந்தவங்களுக்கு மட்டுமல்லாம, ஒட்டுமொத்த மனுச குலத்துக்கும் மத்த உயிர்களுக்கும் உதவி செஞ்சி வாழணும். அப்படி வாழ்ந்து கழிச்சிருந்தாத்தான், அந்தப் பத்து வருசமும் மனுசங்க சந்தோசமா வாழ்ந்ததா அர்த்தம்.
சூது வாது வஞ்சகம் பொறாமைன்னு எத்தனையோ கெட்ட கெட்ட குணங்களுக்கு மனசில் இடம் தந்ததோடு, கடவுளைக் கற்பிச்சி[சுத்தி வளைச்சிக் கடவுளுக்கு வந்துட்டான்யான்னு முணு முணுக்க வேண்டாம்]. மதங்களை உருவாக்கி, ஒருத்தனோடு ஒருத்தன் அடிச்சிகிட்டு லட்சம் லட்சமா செத்துத் தொலைஞ்சதுமட்டுமல்லாம, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம்னு எதையெதையோ கற்பனை பண்ணி, கணக்குவழக்கில்லாத மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகி, அந்தக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளையும் வீணடிச்சாங்க மனுசங்க. இப்போதும் வீணடிக்கிறாங்க.
இந்தப் புத்தி கெட்ட மனுச ஜென்மங்களை எந்தவொரு வார்த்தையால் திட்டினா பொருத்தமா இருக்கும்?
இவங்கள்ல நீங்க ஒருத்தர் இல்லேங்கிறதால மனம் திறந்து சொல்லுங்க,
முட்டாள்கள், மூடர்கள், அடிமடையர்கள்ங்கிற வார்த்தைகள்ல ரொம்பப் பொருத்தமானது எது?