இந்தப் பதிவு அனைத்து ஆண்களுக்கும் பிடிக்கும். பிடிக்காத பெரும்பாலான பெண்கள் எப்படி வேணுன்னாலும் என்னைத் திட்டலாம். அவர்களுக்காகவே 'கருத்துப் பெட்டி'யைத் திறந்து வைத்திருக்கிறேன். நன்றி.
வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.
“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.
“இல்ல, அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைக் குளியலறையிலிருந்து கேட்டேன்."
மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.
“புருஷனைத் தவிர வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”
“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ‘அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” - அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.
மனதைத் தேற்றிக்கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு. சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன். நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. உனக்குன்னு புருசன் இருக்கான். அவன், 'அது' விசயத்திலும் உன்னைத் திருப்திபடுத்த நினைக்கிற நல்ல ஆம்பிளைன்னு நான் நம்புறேன். இருந்தும், அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே நீ. இதோ பாருடி.... மற்றதில் எப்படியோ, ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும், இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்.....வேணும் வேணும்’னு திணவெடுத்துத்[திணவு-செறிவு; தினவு-சொறிதல்] திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா.”
“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.
=================================================================================
கருவில் சற்றே திருத்தம் செய்யப்பட்ட பதிவு.
கருவில் சற்றே திருத்தம் செய்யப்பட்ட பதிவு.
ஹா ஹா ஹா அறிவுப்பசி ஜி நலமோ? நானும் உங்கள் கொமெண்ட் பொக்ஸ் திறந்திருக்கோ என அடிக்கடி பார்ப்பேன் எதுக்கு மூடியே வச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
பதிலளிநீக்கு... ஹையோ சொல்ல மறந்திட்டேன் மீ கதை படிக்கல்ல:) படிக்கல்ல:) படிக்கல்ல:).. இது இந்த கொமெண்ட் பொக்ஸ் மீது ஜத்தியம்ம்ம்:))
அதிராவின் முதல் வருகைக்கு நன்றி.
நீக்கு//எதுக்கு மூடியே வச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//
பதிவு எழுதுவதிலேயே திருப்தி அடைந்துவிடுகிற மனப்போக்கு முக்கிய காரணம். பிறர் பதிவுகளுக்குக் கருத்திட்டுக் கருத்துரை பெறுவதில் ஆர்வம் குறைந்துவிட்டதும் ஒரு காரணம்.
மற்றபடி, மற்றவர்களை அலட்சியப்படுத்தும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.
//... ஹையோ சொல்ல மறந்திட்டேன் மீ கதை படிக்கல்ல:) படிக்கல்ல:) படிக்கல்ல:).. இது இந்த கொமெண்ட் பொக்ஸ் மீது ஜத்தியம்ம்ம்:))// அதிரா பண்ணினது ஜத்தியம்தான்; சத்தியம் அல்ல.
பதிவைப் படித்துக் கமெண்ட் எழுதி என்னை மகிழ்வித்ததற்கு மிக்க்க்க்க நன்றி.
இங்கு போதுமென்ற அட்வைஸ் பெண்களுக்கு மட்டும்தானா இல்லை ஆண்களுக்கும் உண்டா
பதிலளிநீக்குநீங்கள் வேகமாகப் படித்ததில், '...ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும், இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும்...'என்ற வரி உங்கள் பார்வையில் படாமல் போனது.
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மது[ரத்]ரைத் தமிழன்.
வேகமாக படிப்பதில் உள்ள தவறை உணர்ந்து கொண்டேன் சாரி
நீக்குநாங்களும் அடிக்கடி வந்து பார்ப்போம் போஸ்ட் பாக்ஸ் பெட்டி திறந்திருக்கானு...ஏன் பூட்டு போட்டு வைச்சுடறீங்க?!....
பதிலளிநீக்கு#பதிவு எழுதுவதிலேயே திருப்தி அடைந்துவிடுகிற மனப்போக்கு முக்கிய காரணம். பிறர் பதிவுகளுக்குக் கருத்திட்டுக் கருத்துரை பெறுவதில் ஆர்வம் குறைந்துவிட்டதும் ஒரு காரணம்.
நீக்குமற்றபடி, மற்றவர்களை அலட்சியப்படுத்தும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை#
அதிரா அவர்களுக்கு நான் தந்த பதில் இது. இத்துடன் கீழ்வரும் காரணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பதிவு என்று வரும்போது, தன்னிச்சையாக எதையும் எழுதி ஒப்பேத்திவிடலாம். அது தொடர்பான விவாதம் என்று வரும்போது[குறிப்பாக, கடவுள், பக்தியுணர்வு, மூடநம்பிக்கை தொடர்பானவை] பதற்றப்படாமல் சிந்தித்துக் கருத்தை முன்வைப்பதற்குப் போதுமான மனப்பக்குவம் எனக்கில்லை. நம்புங்கள் துளசிதரன்.
வருகைக்கும், கருத்துரை வழங்கி என்னை ஊக்கப்படுத்த நினைக்கும் தங்களின் நல்ல உள்ளத்திற்கும் மிக்க நன்றி.