செவ்வாய், 3 ஏப்ரல், 2018

'அது'க்குமா 'ரோபோ'?!...அடக் கருமாந்தரமே!!!

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஐரோப்பாவின் 'பார்சிலோன்' பகுதியில் ஐரோப்பாவின் முதல் 'பாலியல் ரோபோ விபச்சார விடுதி திறக்கப்பட்டது.

அந்த விடுதிக்கான இணையத்தில், 'பாவனையிலும் உணர்விலும் உண்மையானது போலிருக்கும் இந்தப் பொம்மை, உங்களது கற்பனைகளையும் கட்டுக்கடங்காத இச்சைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

ரேட்?

30 நிமிடங்களுக்கு 60 யூரோக்கள்[70 பவுண்டுகள்]. எனக்கு யூரோவும் தெரியாது, பவுண்டும் தெரியாது. எவ்வளவு ரூபாய்னு நீங்களே கணக்குப் போட்டுக்கோங்க.

இதே போல, டப்ளினில்[இது எங்கே இருக்கு?] ஜூலை மாதம் திறக்கப்பட்டதாம் பாலியல் ரோபோ விபச்சார விடுதி. கட்டணம், ஒரு மணி நேரத்துக்கு 100 யூரோவாம்[பாக்யா வார இதழ், 'ஊரோ' என்கிறது].

இந்தத் தொழில் நல்லாப் போகுமா, படுத்துடுமா?[இது என் உள் மனதின் கேள்வி]

படுக்கிறதாவது?! நிஜமான பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சார விடுதிகளையெல்லாம் ஓரங்கட்டிடும்னு பிரபல ஸ்டார் பாலியல் விடுதி உரிமையாளர்கள் கவலைப்படுகிறார்களாம்.

காரணம், ஆண்களிடத்தில் இந்த ரோபோ மோகம் ரொம்பவே அதிகமாயிடிச்சாம். ஓர்  உதாரணம்.....
ஆஸ்திரியாவில் நடந்த ஆர்ட்ஸ் எலக்ட்ரோனிகா விழாவில், 'சமந்தா'ன்னு ஒரு பாலியல் ரோபோ[பொண்ணுதான்] காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாம். அந்தக் கண்காட்சிக்கு வந்த ஆண்கள் அந்த ரோபோவை ரொம்ப ரொம்ப ரொம்பவே[இன்னும் அஞ்சாறு ரொம்ப போட்டுக்குங்க] படுத்திட்டாங்களாம்; ரோபோவின் கை, கால், மார்புன்னு ஒட்டு மொத்த உடம்பையும் அசிங்கம் பண்ணிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.

ஆண் வர்க்கம் போகிற போக்கைப் பார்த்தா, ரோபோ பாலியல் விடுதிகள் அங்கிங்கெனாதபடி உலகெங்கும் திறக்கப்பட்டுடும்னு நிபுணர்கள் கருத்துத் தெரிவிச்சிருக்காங்களாம்.

இதை நினைச்சிக் கவலைப்படுறதா, எல்லாம் வல்ல கடவுளின் திருவிளையாடல்னு மனசைத் தேத்திக்கிறதான்னு தெரியல!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
'பாக்யா'[ஏப்ரல் 06 - 12; 2018] வார இதழுக்கு நன்றி.