புலனடக்கத்துடன் வாழ்ந்த, பலராலும் நன்கு அறியப்பட்டுப் போற்றப்பட்ட, மிக நல்ல ஒரு மனிதரைக் கடவுள் ஆக்குவது நகைப்பிற்குரியது. இதற்கான குமுதம் அதிபரின் உள்நோக்கம் நல்நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை.
'மகா பெரியவர்' எனப்படும் காஞ்சி பரமாச்சாரியாருக்குத் தூப, தீப ஆராதனை செய்த பிறகுதான் சாப்பிட அமர்வார் அந்தப் பக்தர்.
'மகா பெரியவர்' எனப்படும் காஞ்சி பரமாச்சாரியாருக்குத் தூப, தீப ஆராதனை செய்த பிறகுதான் சாப்பிட அமர்வார் அந்தப் பக்தர்.
சாப்பாடு பரிமாறப்பட்டவுடன், ''எல்லாம் அவருக்கே அர்ப்பணம்'' என்று சொல்லி, கொஞ்சம் நீரைக் கையில் எடுத்து, உணவைச் சுற்றித் தெளித்துவிட்டு உண்ணத் தொடங்குவது அவரின் வழக்கம்.
அன்று, பரிமாறப்பட்ட உணவில் கத்தரிக்காய் கருகியிருப்பதைப் பார்த்து மனம் நொந்தவர், உணவு சமைத்த மருமகளிடம் குறைபட்டவராய், ''பகவானே மன்னிச்சுடுங்கோ'' என்று முறையிட்டு உண்டு முடித்தார். தன் கவனக்குறைவுக்காக மருமகளும் வருந்தினாள்.
இது நடந்து ஆறு மாதம் கழிந்த நிலையில், பக்தர் தன் மருமகளுடன் 'மகா பெரியவா'வைச் சந்திக்க நேர்ந்தது.
பெரியவா, ''அன்னிக்கி ஒரு நாள் எனக்குத் தீய்ஞ்ச கத்தரிக்காய் பண்ணிக் குடுத்தது நீதானே?'' என்று மருமகளைப் பார்த்துக் கேட்க, அவள் உணர்ச்சி வசப்பட்டுத் தேம்பித் தேம்பி அழுதாளாம்.
'தம் பக்தர்கள் வாழ்வில் நிகழும் வித்தியாசனமான சம்பவங்களையும் அவர்களுக்கு நேரும் குறைகளையும் அவர்கள் சொல்லாமலே ஞானதிருஷ்டியால் முன்கூட்டியே அறிவதோடல்லாமல், பக்தாளின் குறைகளையும் நிவர்த்தி செய்தவர் மகா பெரியவா' என்பதாக, ஓராண்டுக்கும் மேலாகக் கதைகள் எழுதி, மகா பெரியவாளை மகா பெரிய கடவுளாக்கியிருக்கிறார்கள் 'குமுதம்' குழுவினர்.
மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி.
தனிப்பட்ட பக்தர்களையும் மகா பெரியவாவையும் தொடர்புபடுத்தி இவர்கள் உருவாக்கும் கதைகள் நம் பொதுமக்களை வெகுவாக ஈர்க்காது என்பது என் எண்ணம். எனவே.....
'மகா பெரியவா, ..... ஊர்களில் நாளை ஜாதிக்கலவரம் மூள இருக்கிறது என்று ஞானதிருஷ்டியால் அறிந்து எச்சரிக்கை செய்தார். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. கலவரங்கள் தடுக்கப்பட்டன' என்பதாகக் குமுதம்காரர்கள் கதைகள் எழுதலாம். எழுதினால், பொதுமக்களும் பெரியவாவைப் போற்றித் துதிபாடுவார்கள்.
பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதல், கற்பழிப்பு, அவ்வப்போது நாட்டில் நிகழும் கொலை கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றையும் பெரியவா முன்கூட்டியே அறிந்து சொல்ல, அரசும் தொண்டு நிறுவனங்களும் உரிய தடுப்பு/நிவாரண நடவடிக்கைகளை எடுத்து ஏற்படவிருந்த சேதாரங்களைத் தவிர்த்ததாகக் கதைகள் பரப்பினால், பாதிப்புக்குள்ளான மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் அவரின் தொண்டுள்ளத்தைப் பாராட்டி விழா எடுத்து மகிழும்.
திடீர் எரிமலைச் சீற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றின் தாக்குதல்களைச் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகவே பரமாச்சாரியார் அனுமானித்து எச்சரிக்கை செய்ததால் சம்பந்தப்பட்ட நாடுகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தத்தம் மக்களைக் காத்ததாகக் கதைகள் படைத்தால் உலக அளவில் மகா பெரியவாவின் பக்தர் எண்ணிக்கை மளமள என்று உயரும்.
தமிழின் நம்பர் 1 வார இதழான குமுதத்தின் அதிபர் அவர்கள் எளியேனின் ஆலோசனைகளை ஏற்று நடைமுறைப்படுத்துவார் என்பது என் நம்பிக்கை.
'சர்வேஸ்வரனைப் போலவே சர்வவியாபியாக இருப்பவர்' என்று குமுதம் இதழால் புகழ்ந்தேத்தப்படுகிற[குமுதம் 30.05.2018] மகா பெரியவா வாழ்க! அவர்தம் புகழ் தரணியெங்கும் பரவுக!!
=================================================================================
அப்படி வாணாம் எனில் இப்படித்தானே எழுதணும் ஹையோ ஹையோ இது கூடத் தெரியல்ல அறிவுப்பசிஜி க்கு:)).. ஹையோ நான் தேம்ஸ்க்கு ஓடிடுறேன்:).
பதிலளிநீக்குஅதிரா, தேம்ஸுக்கு ஓட வேண்டாம். வீட்டோடு இருந்தாத்தானே இது மாதிரி இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்குதுன்னு தெரிஞ்சிக்க முடியும்.
நீக்குநன்றிம்மா.
இப்படி ஞானதிருஷ்டியால் சங்கரராமன் வெட்டுப்பட்டு இறக்கப் போவதும் அறிந்து கொ"ல்ல"லாம்தானே...
பதிலளிநீக்குஇதை வைத்தும் ஒரு கதை எழுதுவார்கள் என்று காத்திருப்போம்.
நீக்குநன்றி கில்லர்ஜி.
அழிப்பது ஈசன் செயல் அதில்லெல்லாம் பெரியவா தலையிட உரிமையில்லை ன்னு சொல்லுடுவாங்க!
பதிலளிநீக்குபெரியவா ரேஞ்சுக்கு கத்திரிக்கா , பொங்கல் , இட்லி , வடை யில தான் கண்ட்ரோல்...
//பெரியவா ரேஞ்சுக்கு கத்திரிக்கா , பொங்கல் , இட்லி , வடை யில தான் கண்ட்ரோல்...//
நீக்குஹ...ஹ...ஹ! நன்றி இளையதாசன்.