வெள்ளி, 25 மே, 2018

யானையிடம் ஆசி! யோசிப்பாய் பக்தனே!!

'சமயபுரம் மாரியம்மன் கோயில்  யானைக்கு மதம் பிடித்தது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்கிகொண்டிருந்தபோது அவர்களைத் தாக்கியது. 8 பேருக்குக் காயம். பாகன் கஜேந்திரன் கொல்லப்பட்டார். கோயில் நடை சாத்தப்பட்டது. யனைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் முயற்சி.....' -இது இப்போது [நண்பகல் 12.00 மணி] 'தந்தி' தொலைக்காட்சி அறிவித்துக்கொண்டிருக்கும் செய்தி.

'ஜெயா என்ற யானை வரவழைக்கப்பட்டு, பாகனைக் கொன்ற மசினி என்னும் யானை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்பது புத்தம் புதிய செய்தி[12.45 மணி].
பக்தகோடிகளின் சிந்தனைக்கு.....

கடவுள் ஒருவரே என்று உங்களின் ஆன்மிக வழிகாட்டிகள் அறிவுறுத்தியும், ஈஸ்வரன், விக்னேஸ்வரன், பெருமாளு, அலமேலு, கந்தசாமி, கருப்புசாமி, காளியம்மா, மாரியம்மான்னு மானாவாரியா சாமிகளை உற்பத்தி பண்ணியிருக்கீங்க; கோயில் கட்டிக் கும்பிடுறீங்க.

''உண்டு தின்று உடம்பை வளர்த்து, உடலுறவில் இனவிருத்தி செய்து ஒரு நாளில் இல்லாமல் போகிறவன் மனுசன். இவன் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது. கடவுளின் பிரதிநிதின்னு வேஷம் போட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறவர்கள் அயோக்கியர்கள்''னு, உங்களுக்குள்ளேயும் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திக்கிறவங்க சொன்னால் கேட்க மறுக்கிறீங்க; குடும்பம் குடும்பமா, கூட்டம் கூட்டமாப் போயி விழுந்து கும்பிடுறீங்க; ஆசீர்வாதம் வாங்குறீங்க.

மனுஷ சாமிகள்கிட்ட ஆசி பெறுவதோடு நிக்கிறீங்களான்னா, ஊஹூம்.

ஒரு சாமிக்குப் பசுமாடு வாகனம். இன்னொரு சாமிக்குப் பெருச்சாளி வாகனம். இன்னும் ஒரு சாமிக்குப் பருந்து வாகனம்னு உங்க மூதாதையர்களில் சிலர் கட்டிவிட்ட கதைகளையெல்லாம் உண்மைன்னு நம்பி.....

பசுமாட்டுக்குப் பூஜை பண்ணி வழிபடுறீங்க. பெருச்சாளிக்குக் கோயில் கட்டிக் கும்பிடுறீங்க. இரை தேடி ஆகாயத்தில் அலையுற கழுகைக் கண்டா கன்னத்தில் போட்டுக்கிறீங்க. 

யானை ஒரு மிருகம். காடுகளில் வாழ்ந்து இனவிருத்தி செஞ்சி வாழ்றது அதன் இயல்பு. அதையும் நீங்க விட்டுவைக்கல.  கோயிலில் கட்டிவெச்சி, தும்பிக்கையைத் தூக்கி உங்க தலையைத் தொட்டுத் தடவுறதுக்குப் பாகனைக் கொண்டு பழக்குனீங்க.

பழக்க தோசத்துல அது தலையைத் தடவினா, நீங்க கும்பிடுற சாமியே உங்க தலையைத் தடவி ஆசீர்வாதம் பண்ணுறதா நம்புனீங்க. மத்தவங்களையும் நம்ப வைச்சீங்க.  நீண்ட நெடுங்காலமா இந்த மூடநம்பிக்கையிலிருந்து உங்களால் விடுபட முடியல. விளைவு.....

இன்று ஒரு பாகன் பலி. ஆசீர்வாதம் வாங்கப்போன பலருக்குக் காயம். இதற்கு முன்பும் இது மாதிரி உயிர்ப்பலிகளும் காயம்படுதலும் நிகழ்ந்திருக்கு.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும் கொஞ்சம் சிந்தியுங்கள். மனிதர்களை வழிபடுவதையும் விலங்குகளிடம் ஆசீர்வாதம் பெறுவதையும் நிறுத்துங்கள்.

செய்வீர்களா?
000000000000000000000000000000000000000000000000000000000000000000000









8 கருத்துகள்:

  1. சொன்னா எவன் கேக்குறான்?! பல தடவை பட்டும் புத்தியில்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கைக்குப் பக்தி தேவையாக இருக்கலாம். புத்தி ரொம்ப முக்கியம்கிறதைப் புரிஞ்சிக்க வேண்டாமா?

      நன்றி ராஜி.

      நீக்கு
  2. அதெப்படி நாங்க மாறமுடியும் ?

    சமயபுரம் மாரியம்மனுக்கு ஏதோ தெய்வகுற்றம் ஏற்பட்டுருச்சு இதுக்கு பரிகாரம் செய்யணும்.

    நித்தியானந்தா சுவாமிகளை கண்டு நிவர்த்தி செய்யணும்.

    ஹூம் அடுத்து ஒரு செலவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் நிர்வாகமே பரிகாரம் செய்யும் என்பது ஊடகச் செய்தி. செய்யட்டும். நம்ம ஊர்ச் சாமிகளிடம் பணமா இல்லை!

      நித்தி கோயிலில் நுழைந்தால் அதற்கொரு பரிகாரம் பண்ணனுமே!

      நன்றி நண்பரே.

      நீக்கு
  3. ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம்னு போயி மாட்டிடம் அடிபட்டு ஆண்மை இழந்து செத்தார்கள்? திராவிட கைக்கூலிகள்தான் சாவான். தூண்டிவிட்ட பார்ப்பான் கமலஹாசன் மட்டுப் பக்கமே போகமாட்டான். சாகிறவன் திராவிடந்தான். ஏன்டா இப்படி ஒண்ணும் தெரியாத மாட்டிடம் வீர்த்தை காட்டுறீங்க? பார்ப்பான் உங்களை தூண்டிவிட்டுட்டு ஓடிப்போயிருவான்டானு பொறுமையாக சொன்னால். பார்ப்பான் விளக்கம் கொடுக்கிறான்..ஆக்ஸிடென்ட்ல எல்லாம் சாகலையா?? திராவிட கைக்கூலிகள் மாட்டிடம் மிதிபட்டு செத்தாலென்ன?

    இன்னைக்கு ஸ்டெர்லைட் செத்தவன் பூராம் அறிவுகெட்ட திராவிடர்கள்தான். இவன் தூண்டிவிட்டுட்டு, இப்போ எழவு கேட்டு நல்லவனாகிவிட்டான்.

    காலங்காலமாக பார்ப்பன அடிமையாக வாழ்ந்தவந்தான் தமிழன். இடப்பாடியும், ஓ பி எஸ்ஸும் பச்சைத் தமிழர்கள்தான். அவர்களைத்தான் தமிழின தூரோகிங்கிறானுக பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு.

    மாடு மூட்டி செத்தால் வீர மரணம் .யானை மிதித்துச் செத்தால் மோட்சம். எல்லாமே பெருமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாணக்கிய வம்சமாயிற்றே, பரம்பரை அடிமைகளை அத்தனை எளிதில் திருந்த விட்டுவிடுவார்களா என்ன!

      அடிமைப் புத்தியிலிருந்தும் மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபடாதவரை, தமிழனுக்கு மாடுகளாலும் யானைகளாலும் மோட்சம் கிடைக்குமே தவிர விமோசனம் கிடைக்க வழியே இல்லை.

      நன்றி வருண்.

      நீக்கு
  4. இந்த யானையிடம் வெகு தொலைவிலிருந்து வந்தும் மக்கள் ஆசீர்வாதம் பெற்றார்களாம். ஒரு துளி கூட சிந்திக்க மாட்டார்களா (:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புனிதமான கோயிலுக்குள்ளேயே யானை மிதித்து பாகன் பலி. கடவுள் என்ன செய்துகொண்டிருந்தார்? எவன் கேட்டான்?

      பரிகாரம் செய்கிறார்களாம். யாருக்கு? சாமிக்கா, யானைக்கா, முட்டாள் பக்தர்களுக்கா?

      திருந்த மாட்டார்கள்; மற்றவர்களையும் திருந்த விடமாட்டார்கள்.

      நன்றி வேகநரி.

      நீக்கு