'படையல்' என்னும் பெயரில் பூஜைக்கு வைத்த உணவுப் பண்டங்களைத் தானே தின்று தீர்ப்பது; செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன் பேர்வழி என்று உடம்பு நோகாமல் தோப்புக்கரணம் போடுவது; ஆண்டு முழுக்கக் காடை, கவுதாரி, ஆடு, மாடு, கோழி என்று கறி விருந்து உண்டு களித்துப் புரட்டாசியில் மட்டும் அசைவம் தவிர்ப்பது என்றிப்படிப் பலவகையிலும் சாமிகளை ஏமாற்றத் தெரிந்தவர்கள் நம் ஆசாமிகள்.
இந்த வரிசையில் முன்னிலை வகிப்பது 'முடி காணிக்கை'.
''எதற்கு இந்த தலைமுடி காணிக்கை?'' என்று சிந்தித்து அறிய முயன்றவர் எவருமில்லை. ''முன்னோர்கள் செய்தார்கள். நாமும் செய்கிறோம்''...அவ்வளவுதான்.
''எதற்கு இந்த தலைமுடி காணிக்கை?'' என்று சிந்தித்து அறிய முயன்றவர் எவருமில்லை. ''முன்னோர்கள் செய்தார்கள். நாமும் செய்கிறோம்''...அவ்வளவுதான்.
தலைமுடி காணிக்கைக்கான காரணத்தைத் திருப்பதி தேவஸ்தானம் தெரியப்படுத்தியிருக்கிறது, அதன் வெளியீடான 'சப்தகிரி' என்னும் மாத இதழில். 'கல்யாண கட்டா'வில் இடம்பெற்றுள்ள தகவல்களை வாசியுங்கள்.
'மனிதனின் பாபங்கள், தோஷங்கள் மற்றும் அகங்காரம் போன்றவையெல்லாம் தலையில்தான் சேரும் என்பார்கள்' என்பது, முதல் மூன்று வரிச்செய்தி. அடுத்த சில வரிகளில், 'இவையெல்லாம் நம்மிடமிருந்து தொலைய வேண்டுமானால் திருவேங்கடவனுக்கு முடி காணிக்கை செலுத்துவது ஒன்றே வழி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலையில் சேருகிற பாபங்கள் முதலானவை நம்மிடமிருந்து தொலைய வேண்டுமானால் நம் தலையையே காணிக்கை ஆக்க வேண்டும். தலையிலுள்ள முடியை மட்டும் காணிக்கை ஆக்கலாம் என்கிறார்களே?!!? ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா!!!
தலை நிறைய மூளை இருக்கிறது என்பதற்காக, ஆசாமிகள் இப்படியெல்லாமா சாமிகளை ஏமாற்றுவது?!?!
--------------------------------------------------------------------------------------------------------------------------
சிறப்புச் செய்தி:
IndiBlogger இன் முகப்புப் பக்கத்தில் இப்பதிவு!
Your post "சாமிகளை ஏமாற்றும் ஆசாமிகள்!...ஹா...ஹா. ..ஹா!!!" is on the IndiBlogger homepage.
இன்பாக்ஸ்
| x |
|
பிற்பகல் 1:12 (2 மணிநேரத்திற்கு முன்பு)
| |||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக