புதன், 20 பிப்ரவரி, 2019

அமேசான் படைப்பிலக்கியப் போட்டியில் தமிழை முந்தியது இந்தி!!!

இணைய வணிக நிறுவனமான அமேசான், 'கிண்டில்' மூலம் நூல் விற்பனையும் செய்கிறது. பதிப்பகங்களின் உதவியின்றி எழுத்தாளர்கள் தத்தம் படைப்புகளைத் தாமே பதிப்பித்து வெளியிட உதவுவதோடு, அவற்றை விற்பனை செய்து உரிய பங்குத்தொகையையும்[Royalty] அளித்துவிடுகிறது. 
அண்மையில் அது ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிப் படைப்புகளுக்கான[நாவல், சிறுகதை, கவிதை] போட்டி ஒன்றை அறிவித்து, அதற்கான காலக்கெடுவை[10.11.2018 - 09.02.2019]யும் நிர்ணயித்திருந்தது.

படைப்புகளுக்கு, மொழிவாரியாகக் கீழ்க்காணும் வகையில் பரிசுகளை அறிவித்தது.

10000க்கும் மேற்பட்ட சொற்களால் ஆன[Long form] படைப்புக்கு ரூ500000.00[ஐந்து லட்சம்] பரிசு.

2000 - 10000 சொற்களால் ஆன[Short form] குறும்படைப்புக்கு ரூ50000.00[ஐம்பதாயிரம்] பரிசு.

கடந்த 09.02.2019ஆம் தேதியுடன் படைப்புகளை அனுப்புவதற்கான காலக்கெடு முடிந்தது[போட்டி முடிவுகள் 31.03.2019இல் அறிவிக்கப்படவுள்ளன].

இந்நிலையில், ஆர்வம் காரணமாக நான் கண்டறிந்த, போட்டியில் இடம்பெற்றுள்ள படைப்பு விவரங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.

பங்கு பெற்றுள்ள மொத்தப் படைப்புகளின் எண்ணிக்கை[இவற்றுள் கட்டுரை நூல்களும் கணிசமாக இடம்பெற்றுள்ளன. அவை பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டியவை] 3603[மூவாயிரத்து அறுநூற்று மூன்று].

ஆங்கிலம்.....
நீள் படைப்பு[Long Form]...........................................2000
குறும்படைப்பு[Short Form].......................................1000
                                                                                             
மொத்தம்...............................................................3000


தமிழ்.....
LF.............................................................................122
SF.............................................................................127
                                                                                                
மொத்தம்.................................................................249

இந்தி.....
LF.............................................................................145
SF.............................................................................209
                                                                                                  
மொத்தம்.................................................................354       

ஆங்கில மொழிப் படைப்புகளுடன் ஒப்பிட்டால், தமிழ், இந்தி மொழிப் படைப்புகள் மிக மிகக் குறைவு. ஆங்கிலம் உலக அளவில் பரவலாக அறியப்பட்ட மொழி என்பதால் அதில் அதிக அளவில் படைப்புகள் இடம்பெற்றிருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

இந்தி மொழிப் படைப்புகளோடு ஒப்பிடுகையில் தமிழில் 105 நூல்கள் குறைவாக உள்ளன.

தமிழ் எழுத்தாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதைத் தமிழர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். 
====================================================================