ஞாயிறு, 16 ஜூன், 2019

கவிதை சிறிது! தத்துவம் பெரிது!!

கடவுள். ஆன்மா, சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்பன குறித்த வறட்டு வேதாந்தங்களைப் புறக்கணித்து, மனிதர்களின் பலனவீனங்களைப் பட்டியலிட்டுச் சிந்திக்கத் தூண்டும் படைப்பு இது; 'தமிழில் சில முதலிதழ்கள்'[நர்மதா பதிப்பக, சென்னை. முதல் பதிப்பு: மே 2011] என்னும் நூலில் இடம்பெற்ற ஒரு முத்து இது.

படித்துப் பயனடைவீர்!

#உலகம் என்பது வாடகை வீடு -அதில்
ஒவ்வொருவருமே குடித்தனக்காரர்
பலரும் வருவார் பலநாள் வாழ்வார் -தான்
பழகிடும் வீட்டில் பற்று வைப்பார்.

உடும்பைப் போலவே ஒட்டிக் கொள்வார் -இந்த
உலக ஆசையில் சிக்கித் தவிப்பார்
குடும்பம் காண்பார் குழந்தைகள் பெறுவார் -பொருள்
கோடி கோடியாய்க் குவிந்திடச் செய்வார்.

நிரந்தரம் வாழ்வென நம்பி இருப்பார் -தனக்கு
நிம்மதி வேண்டிக் கோயில் சுற்றுவார்
சரிந்திடும் வாழ்வின் மறைபொருள் உணரார் -வீண்
சாகசம் புரிந்து சகதியில் உழல்வார்#

[படைத்தவர்: கவிஞர் பொன். அய்யனாரப்பன்]

=========================================================================