எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

புதன், 12 ஜூன், 2019

தினமலர் நாளிதழ்க்காரனின் திமிர்த்தனம்!!!

அறுவைச் சிகிச்சையில் மிகப் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற மிகச் சிறந்த மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையில்கூடத் தவறு நேர்வதுண்டு. இளம் வயதுக்காரர்கள் பதற்றம் காரணமாக, அறுவைச் சிகிச்சையை செய்து முடிக்கும்போது அறுவைக்கான கத்தரிக்கோல் போன்ற சிறிய சாதனங்களை அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவது அரியதாக இடம்பெறுகிற நிகழ்வாகும்.

அத்தகைய இரு நிகழ்வுகளைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது 12.06.2019இல் வெளியான தினமலர் நாளிதழ்.

செய்தி வெளியிட்டதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அந்தச் செய்தியை வைத்துத் தமிழர்களின் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தை நக்கல் செய்திருக்கிறது இந்த அல்பம்.

தமிழர்களின் தயவில் பத்திரிகை விற்று வயிறு வளர்த்தாலும் தமிழினத்தை இழிவுபடுத்துவதில் முன்னணி வகிக்கிறது இந்தக் கும்பல்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக