சனி, 1 ஜூன், 2019

நான் ஏன் தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைப்பதில்லை?!

காரணங்கள்.....

ஒன்று:
நாம் எழுதும் பதிவுகளில் பிழைகள் நேர்வது இயல்பு. பிழைகளை முற்றிலுமாய் நீக்குதல் அத்தனை எளிதல்ல எனினும், பிழைகளைக் களையும் எண்ணம் சில பதிவர்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை.

இரண்டு:
அரசியல் காழ்ப்புணர்வுடன் மிக மிக அநாகரிகமாக, மனம்போன போக்கில் எழுதித் தள்ளும் பதிவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.

மூன்று:
எத்தனை முறை படித்தாலும் புரியவே புரியாத உள்ளடக்கங்களைக் கொண்ட இடுகைகளும் தமிழ்மணத்தில் இடம்பிடிக்கின்றன.

நான்கு:
தமிழ் வளர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்மணம் திரட்டியில். தமிழ் மொழி, இனம், இவற்றின் முன்னேற்றம் போன்றவை  குறித்த பதிவுகள் இணைக்கப்படுதல் வரவேற்கத்தக்கது. இவற்றிற்குத் தொடர்பே இல்லாத ஆங்கிலத்திலான பதிவுகளும் இடம்பெறுகின்றன.

ஐந்து:
வருமானம் ஈட்டுவதற்காகத் தமிழ்மொழிப் பதிவுகளுக்கும் விளம்பரங்களை வழங்குகிறது[சிலவற்றிற்கு மட்டும்] கூகுள். இதன் விளைவாக, வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, நாளிதழ்ச் செய்திகளையே மனம்போன போக்கில் பதிவாக்கித் தமிழ்மணத்தில் இணைக்கிறார்கள் சிலர்.

மேற்கண்டவை[இவை போதும்], தமிழ்மணத்தில் என் பதிவுகளை நான் இணைக்க விரும்பாததற்கான காரணங்கள் என்று நினைக்கிறீர்களா? 

அல்ல...அல்ல...அல்லவே அல்ல. பின்னே?

தமிழ்மணம் என் பதிவுகளை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை['ஏன்?' என்பது தமிழ்மணம் நிர்வாகிகள் மட்டுமே அறிந்த ரகசியம்]. அதனால் நானும் இணைக்க முயல்வதில்லை என்பதே உண்மைக் காரணம்.

ஹி...ஹி...ஹி!
==================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக