சனி, 6 ஜூலை, 2019

இந்தி 39%.....பிற இந்திய மொழிகள் 51%

அண்மையில் நடந்து முடிந்த இந்திய நாட்டின் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், பதவியேற்பதற்குத் தேர்வு செய்த மொழி பற்றிய விவரத்தை இன்றைய தினத்தந்தி[06.07.2019] நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்தி மொழியில் பதவி ஏற்றவர்கள் 39% மட்டுமே. ஆங்கிலத்தில் 10 பேர். இதர இந்திய மொழிகளில் பதவியேற்றவர்கள் 51% ஆவர்.

51% விழுக்காடு எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்கள் ஆற்றிட வேண்டிய தலையாய கடமைகள்.....

*நடுவணரசு இந்தியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துதல்.

*ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழிகளையும்[இந்தி உட்பட] தொடர்பு மொழியாக்குதல்.

தத்தம் தாய்மொழிமீது பற்றுக்கொண்ட உறுப்பினர்கள் தாமதம் சிறிதுமின்றி, ஒருங்கிணைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகும். உரிய முறையில் ஒத்துழைப்புத் தருவது மாநில மொழிகளில் வெளியாகும் அனைத்து ஊடகங்களின் கடமையாகும்.

நன்றி: தினத்தந்தி[06.07.2019] நாளிதழ்
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக