பாகிஸ்தானின் வடக்கு எல்லையில்கம்பீரமாகஉயர்ந்து நிற்கும் இமயமலைக்குப் பக்கத்திலேயே காரகோரம் பனிமலை. திரும்பிப் பார்த்தால் ஹிந்துகுஷ் மலைத்தொடர். இந்த மலைத் தொடர்கள் சந்திக்கும் இடத்தின் நடுவே சிந்து நதியும், கில்கிட் ஆறும் சங்கமிக்கின்றன. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழகிய இயற்கைக் காட்சிகளின் மத்தியில் ஹன்சா பள்ளத்தாக்கு (Hunza Valley) அமைந்திருக்கிறது.
இந்தப் பகுதியினர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வதைக் கண்டு வியந்த மானுடவியலாளர்கள், இதற்கான காரணத்தை ஆராயும்போது, ஹன்சா மக்கள் இயற்கையின் வழியில் தங்கள் வாழ்வுமுறையை அமைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வதால்தான் இந்த உலகிலேயே ஆரோக்கியமாக அதிக நாட்கள் உயிர் வாழக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இத்தனைக்கும் இவர்கள் தினமும் ஜிம் செல்வது கிடையாது, சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது கிடையாது. அதற்கான பணமும் இவர்களிடம் கிடையாது. பெண்கள் மேக்-அப் செய்யாமல், அழகு நிலையங்கள் என எங்கும் போகாமலே உலகிலேயே அழகான பெண்கள் என்ற பெருமையுடன் சாதாரணமாக வாழ்கின்றனர். இந்தப் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, இயற்கை வளங்களை அளவாகப் பயன்படுத்தி வாழ்கின்றனர்.
நம் ஊரில் 50 வயதை தாண்டினாலே சீனியர் சிட்டிசன் பட்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஹன்சா பள்ளத்தாக்கில் 70 வயது பெண்களும் குழந்தை பெற்றெடுக்கின்றனர். 90 வயது வரைகூட மாதவிடாய் நிற்பது இல்லையாம். ஹன்சா மக்கள் சராசரியாக 130 வயது வரை சுறுசுறுப்புடன் எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் உயிர்வாழ்கின்றனர்.
இவர்களின் இந்த ரகசியத்திற்கு முக்கிய காரணம் பாதாமி பழங்கள்தான் என அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். Apricots என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதாமிப் பழங்களை அதிகம் உண்கின்றனர். கோடை நேரத்தில் ஹன்சா பள்ளத்தாக்கிற்குச் சென்றால், அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் பாதாமி பழங்கள் வெயிலில் உலர்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். பாதாமி விதைகளிலிருந்து பாதாமி எண்ணை எடுத்து, உணவிற்குப் பயன்படுத்துகின்றனர்.
ஆரோக்கியமான உணவு, சுத்தமான சுற்றுச்சூழல், தினசரி உடல் பயிற்சி. இவையெல்லாம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுட்காலத்துடன் மகிழ்ச்சியாய் வாழ வைக்கிறது. அதைத்தேடி எங்கும் அலையாமல், பேராசைப்படாமல், இருப்பதைக்கொண்டு வாழ்ந்தாலே அமைதி கிடைக்கும் என்பதற்குச் சாட்சியாய் ஹன்சா மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த அதிசய மக்களைச் சந்திப்பதற்காகவே உலகின் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து, இவர்களின் வாழ்வுமுறையைக் கற்கின்றனர்.
=================================================================================நன்றி: குங்குமம்[தோழி] இதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக