செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை!

இது இளவட்டங்களுக்கானது. வயோதிகர்களும் வாசிக்கலாம். இதன்மூலம், இழந்த தங்கள் வாலிபத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்; இன்பசாகரத்தில் மூழ்கித் திளைக்கலாம் என்பதற்கு உத்தரவாதம் உண்டு! 

கன்ற பெரிய அறை. அதன் நடுவே ராஜாக்களின் ஹம்ச தூளிகா மஞ்சம் போல படுக்கை. அது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அறையெங்கும் மனதைக் கிறங்கடிக்கும் வாசனைத் திரவியங்களின் நறுமணம்.

கதவு திறந்து மூடப்படும் சப்தம்.

எதிரே, அழகிய சிற்பம் போல் சர்வ அலங்காரங்களுடன் அவள்.

அவள் என்னவள்; எனக்கு மட்டுமே உரிமையாக்கப்பட்டவள்.

பால்பழத் தட்டுடன், வண்ண மயிலாக ஒயிலாக நடை பயின்று என்னை நெருங்கினாள்; தட்டை வைத்துவிட்டுச் சட்டெனக் குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

“ஏன் இந்த மூடப் பழக்கம்?” என்று கேட்டு, அவள் தோள் பற்றித் தூக்கி நிறுத்தினேன்.

மெலிதாக அவள் தேகம் நடுங்குவது தெரிந்தது. முகம் முழுக்க வியர்வை முத்துகள்.

அவளின் அழகு மேனியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை நோட்டம் விட்டு, “என்னைத் தவிர வேறு யாரும் உன் அழகை ரசித்துவிடாமல் இருக்கவா அங்கங்களை மறைக்கும் இந்த  அலங்காரம்?” என்று நான் கேட்க, அவள் வதனத்தில் வெட்கம் பரவியது; தலை கவிழ்ந்தாள். அந்த அழகுக் கோலம் என் ஆண்மையைக் கிளர்ந்தெழச் செய்தது.

அவளைப் பஞ்சணையில் அமர வைத்து அவள் அணிந்திருந்த தாலி தவிர, காதணி, மூக்குத்தி உட்பட அத்தனை நகைகளையும் கழற்றினேன்; அவள் அழகை மறைத்திருந்த ஆடைகள் மூலைக்கொன்றாய்ப் பறந்தன.

எதை மறைப்பது, எதைத் தவிர்ப்பது என்று திகைத்து மயங்கி, “என்னங்க இதெல்லாம்?” என்று  முணுமுணுத்தாள் அவள். அந்த முணுமுணுப்பின் பின்னணியில் கட்டுக்கடங்காத தாபம் கரைபுரண்டுகொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

“எதுக்குங்க......” என்று இன்னுமொரு கேள்வியை அவள் எழுப்ப முயன்றபோது, “உன் உடம்பில் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் அத்தனை இடங்களிலும் முத்தம் பதிக்க வேண்டும். அதுக்குத்தான்” என்றேன்.

அவளின் ஒட்டுமொத்த உடம்பும் ஒரு முறை சிலிர்த்து ஓய்ந்தது.

அவளை இதமாகத் தழுவிப் படுக்கையில் கிடத்தியபோது, வான வெளியிலிருந்து வண்ண மலர்களை யாரோ தூவினார்கள். எங்கும் மதுரகீதங்கள் ஒலித்தன. வகை வகையான வாச மலர்கள் நேசமுடன் என் நாசியில் உறவாடின.

ஈருடம்பு என்ற நிலை மாறி ஓருடம்பாய் இருவரும் பிணைந்தோம்.

காற்றுப் புகக்கூட இடைவெளி இல்லை.

அவளிடம்தான் எத்தனை மலர்கள்! எத்தனை கனிகள்!!

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை ஐம்புல இன்பங்களும் பெண்ணிடத்தில் உண்டு என்று பெரியவர்கள் சொன்னது எத்தனை உண்மை. அதை அனுபவபூர்வமாக அறிந்து அனுபவித்துப் பூரித்தேன்.

“நன்றி...நன்றி இறைவா!” என்று ஓசைப்படாமல் என் உள்மனம் முழக்கமிட்டது.

எல்லாம் முடிந்தபோது எங்கள் உடம்புகள் குளிர்ந்திருந்தன.
இப்போது என் சிந்தனை வேறுபுறம் திரும்பியது.

உடலுக்கும் மனதுக்கும் அற்புத சுகம் அளிக்கும் இந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்கிறார்களே, ஏன்?

“பேரின்பம் என்று ஒன்று இருப்பதால்” என்கிறார்கள்.
இருந்துவிட்டுப் போகட்டுமே. இன்னொரு பேரின்பம் இருப்பதால் இது சிற்றின்பம் ஆகிவிடுமா?

ஓர் ஆணும் பெண்ணும் மனம் ஒத்து இணைகிற போது பெறும் இன்பம் பேரின்பம்தான். அனுபவித்து அறிய வேண்டிய உண்மையல்லவா இது.
---------------------------------------------------------------------------------------------------------------------------சேலத்தைச் சேர்ந்த, அரிமா ச. மாதவன்[M.A] எழுதிய, ‘கடவுளிடம் நூறு கேள்விகள்’[பாலாஜி பதிப்பகம், சேலம், முதல் பதிப்பு:2005] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது இப்பதிவு.

கட்டுரை வடிவில் இருந்த நூலின் ஒரு சிறு பகுதியை, எனக்குக் கைவந்த நடையில் மெருகூட்டிக் கதையாக்கித் தந்திருக்கிறேன். 

எழுதி முடித்துத் திரும்ப வாசித்தபோது, விரசமான வாசகங்களும் வர்ணனைகளும் தென்பட்டன. அவற்றை நீக்கிப் பதிவிட்டபோது கதை வெகுவாகச் சுருங்கிவிட்டது தெரிந்தது. கதையைப் பெரிதாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

நூலாசிரியருக்கு என் மனம் நிறைந்த நன்றி.-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக