பக்கங்கள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மோடியும் மொழிபெயர்ப்புக் கருவியும்!

நேற்று[10.07.2019] வெளியிட்ட ஒருபதிவில்[https://pasiparamasivam.blogspot.com/2019/08/blog-post_25.html] காதில் பொருத்திக்கொள்ளும் ஒரு மொழியாக்கக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுக்கீசியம் என நான்கு மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

உலகின் முக்கிய மொழிகள் பலவும் விரைவில் இடம்பெறக்கூடும் என்று குறிப்பிட்டதோடு, அவற்றுள் தமிழும் ஒன்றாக இருக்கும் என்னும் என் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தேன்.

தமிழ் இடம்பெற்றதோ இல்லையோ, இந்தி இடம்பிடித்துவிட்டதை இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் வாய்மொழி மூலம் அறிய முடிகிறது.

கீழ்வரும் நகல் பதிவே அதற்கான ஆதாரமாக உள்ளது.

[நன்றி: ‘தமிழ் இந்து’]

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் இந்தியும் ஒன்று. 

மோடி, தன் தாய்மொழியான குஜராத்தியில் பேசுவதற்கேற்ற வகையில் மொழியாக்கக் கருவியை வடிவமைக்கச் செய்து, அம்மொழியிலேயே கிரில்ஸ்ஸுடன் உரையாடியிருப்பாரேயானால் அது மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருக்கும்.

நடந்தது எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். இந்திய நாடாளுமன்றங்களில் உறுப்பினர்கள் தத்தம் மொழிகளில் பேசுவதற்கும், அவை உடனடியாக மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுவதற்குமான கருவிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் உடனடித் தேவையாகும்.

இனியும் இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்று சொல்லிக்கொண்டிராமல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துதல் வேண்டும் என்றும் நடுவணரசை வற்புறுத்துகிறோம். 
========================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக