பக்கங்கள்

புதன், 28 ஆகஸ்ட், 2019

நாடாளுமன்றத்தில் ஒரு ‘ஞான சூன்யம்’!!!

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தேர்தலில்[அண்மையில் நடைபெற்றது] வெற்றி பெற்று அவை உறுப்பினராக ஆகியிருப்பவர் பிரக்யாசிங் தாக்கூர் என்னும் சாமியாரிணி[பெண் சாமியார்]. 

[பில்லி]சூன்யத்தில் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர் இவர் என்பதை, “சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மரணம் அடைந்ததற்குக் காரணம் எதிர்க்கட்சிகள் சூன்யம் வைத்ததுதான்” என்று ப.ஜ.க.அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் இவர் பேசியதன் மூலம் அறியலாம்.

சூன்யத்தை முழுமையாக நம்புகிற இந்த இவர் தன் தொகுதி மக்களில் பெரும்பான்மையோரைச் சூன்யம் வைத்து மயக்கித் தனக்கு வாக்களிக்கச் செய்தார் என்று நாம் கருதினால் அதில் தவறேதும் இல்லை.

ஆனால், இவ்வாறு கருதுவதற்கு நம் பகுத்தறிவு அனுமதிக்காது.

சூன்யம் என்பது மூடநம்பிக்கைகளில் ஒன்று என்பது அறிவியலாளர்களால் ஆராய்ந்து கண்டறியப்பட்ட உண்மையாகும்.

இந்த அறிவியல் யுகத்தில் இந்த மூடச் சாமியாரிணிபோல இன்னும் எத்தனை ஞான சூன்யங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ தெரியவில்லை.  இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாயின் இந்த நாடு பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்பதில் எள்ளத்தனையும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இவர் போன்றவர்களைக் கண்டித்துத் திருத்துவது ப.ஜ.கட்சிக்குத் தலைமை வகிப்போரின் தலையாய கடமை ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக