‘கார்ட்டர்’ என்பது ஒருவகைப் பாம்பினம். இது வடஅமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் அடர்ந்த காடுகளில் வாழ்வது.
ஒரு பொந்தில் குறைந்தபட்சம் பத்தாயிரம் பாம்புகள் வசிக்கும். இவை வளைந்து நெளிவதைப் பார்க்கவே உடல் நடுங்கும்.
இளவேனிற்பருவம் வந்தால் போதும்... கார்ட்டர் பெண் பாம்புகள் உடலுறவுக்குத் தயாராகி, ஒவ்வொன்றாக வெளியே வரும். அவற்றுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக, ஆண்கள் சூழ்ந்துகொண்டு நடத்தும் போராட்டம் நம்மை மிரள வைக்கும்.
பெண் பாம்புகளுடன் உடலுறவு கொள்ளும் முயற்சியில் ஆண் பாம்புகளுக்கிடையே கடும் போட்டி நிலவும். காரணம், ஆண் பெண் பாம்புகளின் எண்ணிக்கை சமநிலையில் இல்லாததே. நூறு ஆண் பாம்புகளுக்கு ஒரு பெண் பாம்பு என்று கணக்கிட்டிருக்கிறார்களாம்.
விளைவு.....
கட்டுப்படுத்த இயலாத காம வேட்கையுடன், ஆண்கள் சிலிர்த்தெழுந்து, ஒன்றையொன்று இடித்துத் தள்ளிக்கொண்டு, வளைந்து நெளிந்து பெண் பாம்புக் கூட்டத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்து செல்லும்.
இந்தப் போட்டியில் பலசாலிகளான ஆண் பாம்புகள் மட்டுமே தமக்குரிய பெண் பாம்புகளை அணுகி, புணர்ந்து இன்புற முடியும். மற்றவையெல்லாம் தேமே என்று வேடிக்கை பார்த்து நொந்து நூலாக வேண்டியதுதான்.
போட்டியில் வென்று, பெண்ணைப் புணர்ந்த ஒவ்வொரு ஆண் பாம்பும் உடலுறவுக்குப் பிறகு தன் உறுப்பிலிருந்து கோந்து போன்ற ஒருவிதத் திரவத்தைப் பெண்ணின் உறுப்பில் பீச்சுமாம். அத்திரவம் உடனே கெட்டிப்பட்டுவிடுவதால் வேறொரு ஆண் அதனுடன் உறவு கொள்ள இயலாது[பெண் பாம்பு குட்டி போடும்வரை. முட்டையிடும் பாம்புகளும் உண்டாம்].
உடலுறவு விசயத்தில் ஆறறிவு மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன இந்த ஐந்தறிவு ஜீவராசிகள்!
அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கின்ற அந்த ஆண்டவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றோ!?
=================================================================================https://groups.google.com › forum[மதன் அவர்களுக்கு நன்றி] தளத்திலிருந்து சுட்டெடுத்து எனக்குரிய நடையில் வடிவமைக்கப்பட்டது இந்தப் பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக