பக்கங்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

அகத்தின் அழகு முகத்தில் தெரியாது!!!

#ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. 2013 ஆம் ஆண்டு, 16 வயதுச் சிறுமிக்கு வன்கொடுமை புரிந்ததாக இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நிறுத்திவைத்திட வேண்டும் என்று இவர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்# -இது இன்றைய[24.09.2019] ‘தமிழ் இந்து’ நாளிதழ்ச் செய்தி.
மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகளுக்குத் தலை வணங்குகிறோம்.

கீழ்க்காணும் இவனின் புகைப்படத்தை உற்று நோக்குங்கள்.

‘களங்கம் சிறிதும் படியாத களையான முகம் கொண்ட இந்தச் சாமியாரா இந்த இழிசெயலைச் செய்தான்?’ என்னும் ஐயம் உங்களுக்குள் எழுகிறதுதானே?

ஆம், மாசு மருவற்ற முகத் தோற்றத்துடன் துறவுக்கோலம் கொண்ட இவன்தான் கள்ளங்கபடமற்ற ஒரு சிறுமியின் கன்னித்தன்மையைச் சூறையாடியிருக்கிறான்.

‘அகத்தின் அழகு[குணம்] முகத்தில் தெரியும்’ என்னும் நம் முன்னோர்களின் அனுபவ மொழி முற்றிலுமாய்ப் பொய்த்துப்போனது. 

அழகான தாடி மீசையுடன், இவனைப் போன்ற கவர்ச்சிமிகு சாமியார்கள் இன்றளவும் இந்த மண்ணில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய இழி பிறவிகள் குறித்து அறிய நேர்ந்தால் தயங்காமல் பரப்புரை செய்யுங்கள்; நம் மக்களை விழிப்படையச் செய்யுங்கள்.

நன்றி.
========================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக