பக்கங்கள்

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

மனித மந்தை!!!

பக்தகோடிகளே,

ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படும் திருப்பதி ஏழுமலையான், கஞ்சி...மன்னிக்கவும்,... காஞ்சி வரதப்பன், சபரிமலை ஐயப்பன் போன்ற சாமிகளைத் தரிசனம் செய்யத்தான் ஆட்டுமந்தை போல் கும்பல் கும்பலாகப் பெரும் எண்ணிக்கையில் பயணிக்கிறீர்கள். 

வெறும் வழிபாட்டோடு மனநிறைவு கொள்ளாமல், நேர்ந்துகொள்ளுதல் என்னும் பெயரில் சரம் சரமாய்த் தங்க வைர நகைகளையும், கட்டுக்கட்டாய்க் கோடிக் கணக்கில் ரூபாய்களையும் உண்டியல்களில் கொட்டிவிட்டு வருகிறீர்கள்.

சிந்திக்கும் பழக்கம் என்பது உங்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை.

அது இருந்தால்.....

‘எத்தனை எத்தனை சாமிகளை வழிபட்டாலும், அத்தனை சாமிகளும் ஒரே கடவுளின் வேறு வேறு வடிவங்களே; அருள்பாலிப்பதில் வேறுபாடு ஏதுமில்லை’ என்று சொல்லப்படுவதை உணர்வீர்கள்.

உணர்ந்தால்.....

 குறிப்பிட்ட சில சாமிகளை மட்டுமே தேடி ஓடுவதைத் தவிர்த்து, உங்கள் ஊருக்கு அருகிலுள்ள உங்களின் மூதாதையர் போற்றித் துதித்த சாமிகளையே நீங்கள் வழிபட்டுப் பயன் பெறுவீர்கள்.

உங்களால் இயன்ற காணிக்கைகளைச் செலுத்தினால் அத்தொகை கோயிலைப் பராமரிப்பதற்கும், கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் பயன்படும்.

இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட உங்களுக்கு வாய்க்காததால், ஏராளமான கிராமப்புறக் கோயில்கள் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன. அத்தகைய பரிதாபத்துக்குரிய கோயில்களில் கீழ்க்காண்பதும் ஒன்று. அது குறித்து நாளிதழில் வெளியான செய்தியை, உரிய நகல் படிவத்துடன் பதிவு செய்திருக்கிறேன்.

வாசியுங்கள். இது உங்களுக்கான வளமான சிந்தனைக்கு வழிகோலுகிறதா பார்ப்போம்.

நன்றி.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக