பக்கங்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மனித உருவம் உருவான காலம்!

#இந்தப் பூமியானது அண்டவெளியில் நெருப்பு உருண்டையாச் சுழன்றுகொண்டிருந்த நிலையில், ஒரு காலக்கட்டத்தில் கனத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இடைவெளியில்லாமல் பெய்தது.

பெய்துகொண்டே இருந்தது.

பூமியின் மீது கொட்டிக்கொண்டேயிருந்த அந்தக் கனத்த மழையின் காரணமாக, தீப்பந்தாக இருந்த இந்தப் பூமி கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்துகொண்டே வந்தது.

இதன் விளைவாக.....

பூமியின் சில பாகங்களில் பனி மலைகள் தோன்றின. பெரும் பரப்பளவின் கடல் உருவானது. நிலப்பரப்பில் பல இடங்களில் பாறைகள் உருவாயின. காலப்போக்கில்.....

கடலில் பரப்பில் மீன் முதலான உயிரினமும் நிலப்பகுதியில் புல், பூண்டு, புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள்  என்றிவையும் தோன்றின. சிறு சிறு விலங்குகளுக்கிடையே மிகப் பிரமாண்டமான உருவம் கொண்ட ராட்சத விலங்குகளும் உருவாகி வாழ்ந்தன.

நான்கு கால்களால் நடந்த சில விலங்கினங்கள் மரங்களின் மீது வசிக்கக் கற்றுக்கொண்டன.

இவற்றுள் பல்லாயிரம் ஆண்டுக்காலம் மரங்களில் வசித்துவந்த ஓர் உயிரினம் தரையிறங்கி இரு கால்களின் உதவியால் நடக்கக் கற்றது. தொடர்ந்து முயன்றதன் விளைவாக, முன்னங்கால்கள் இரண்டையும் இரு கைகளாகப் பயன்படுத்தப் பயின்றது.

இந்தத் தொடர் பயிற்சி முழுமை பெற்றபோதுதான் மனித இனம் தோற்றம் கொண்டது எனலாம்.....#
============================================================================================
க.நா.சுப்பிரமணியம் அவர்களின், ‘மனிதகுல சிந்தனைகள்’[அர்ஜித் பதிப்பகம், நாகர்கோயில்; முதல் பதிப்பு:2010] என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது இச்சிறு பகுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக