எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 2 அக்டோபர், 2019

தும்பைத் திரித்துவிட்டு வாலைப் பிடித்த கூகுள்!!!


வேறு வேறு வகையிலான செயலிகள் [பல்வேறு அக்கவுண்ட்களுக்கும் பயன்படும் Apps] கூகுள் சேமிப்புக் கிடங்கில் குவிந்து கிடக்கின்றன என்பதும், தொழில் நிறுவனங்களும் கல்வியாளர்களும் அவற்றில் தத்தமக்குத் தேவையானவற்றைப் பதிவிறக்கம் செய்து பயனடைகிறார்கள் என்பதும் மிக்க மகிழ்வு தரும் செய்தியாகும்.

அதே நேரத்தில், மோசமான செயலிகளும் மில்லியன் கணக்கில்[ஒரு கோடிக்கும் அதிகமாக] பெருமளவில் இடம்பிடித்துள்ளனவாம். 

இவற்றிலிருந்து[மோசமானவை] 29 செயலிகளைக்[ஒரு கோடிக்கும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டன] கூகுள்  அதிரடியாக நீக்கியிருக்கிறது என்பது நேற்றைய[01.10.2019] தினமலர் நாளிதழ்ச் செய்தி.

கூகுளின் இப்பணி பாராட்டுக்குரியதுதான். ஆனாலும், தலையாய இரு சந்தேகங்கள் எழுவதை நம்மால் தவிர்க்க இயலவில்லை.

ஒன்று:
பெரும் எண்ணிக்கையில் 
தீமை பயக்கும் செயலிகள் கிடங்கில்[பிளே ஸ்டோரில்] இருக்கும்போது 29 ஐ மட்டும் நீக்கியிருப்பது ஏன்? 

இரண்டு: 
இவற்றைக் கிடங்குக்குள் அனுமதிக்கும்போது இவை தீமை பயப்பவை என்பது கூகுளுக்குத் தெரியாதா?!

தெரிந்தே தவறு செய்கிறதா?

கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம்!
==========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக