எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 30 செப்டம்பர், 2019

இவரா கடவுள்? ஹி...ஹி...ஹி!

பல்லாயிரக் கணக்கில் ‘ஹிட்ஸ்’ பெறவேண்டிய பதிவு இது! பெற்றவை மிகச் சில ஆயிரங்கள் மட்டுமே!! படிக்கத் தவறிய  அறிவுஜீவிகளுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு!!!
டைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்கிறார்கள்.

எல்லா உலகங்களையும் [மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது] முதல் தடவையாக எப்போது படைத்தார்?

ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாகப் படைத்தாரா, இல்லை, தொகுதி தொகுதியாகவா?

தான் படைத்த உலகங்களை, அழியாமல் தானே காப்பாற்றுகிறாராம். சரி. படைப்பதற்கு முன்னால் தனிப் பெரும் சக்தியாக அவர் மட்டுமே இருந்தார்; படைத்தார். அவர் படைத்த உலகங்களுக்கு யாரால் ஊறு விளைவிக்க முடியும்? அப்புறம் எதற்கு ‘காத்தல்’ தொழில்?

உலகங்களைப் படைத்த கடவுள் ஒரு கட்டத்தில் அவைகளை அழித்து விடுகிறாராம். ஏனாம்?

அதர்மம் தலைவிரித்து ஆடும்போது அழித்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

அன்பே உருவான, அறிவுக் கடலான, சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எப்படி? அது உருவானது எப்படி?

எப்படியோ தோன்றித் தொலைத்துவிட்டது. அதன் அட்டூழியம் அதிகரித்தபோதுதான் கடவுள் விழித்துக் கொண்டாரா? அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?

விழிப்புப் பெற்றவர், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு, ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே? ஒட்டு மொத்த உலகங்களையும் ஏன் அழிக்கிறார்?

ஒரு முறை அழித்தால் போதும்தானே? உலகங்களோடு சேர்ந்து அதர்மமும் அழிந்துவிடும்தானே? மீண்டும் மீண்டும் தான் படைத்த உலகங்களை அழிக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஒரு முறை கடவுளால் அழிக்கப்பட்ட அதர்மம் எப்படியோ தப்பித்து, எங்கேயோ பதுங்கியிருந்ததா? எங்கே?

இப்படிக் கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே போகும் அவசியம் ஏன் நிகழ்ந்தது?

கடவுள், தர்மம், அதர்மம் என்று ஊடகங்களில் ‘ஆன்மிகவாதிகள்’ எழுதும் கட்டுக்கதைகளுக்கு அளவே இல்லை. மேடைகளில் செய்யும் பிரச்சாரங்கள் கணக்கிலடங்கா.

நாம் முன்வைத்த மேற்கண்ட கேள்விகளுக்குப் பக்தி நெறி பரப்பும் பெருமகன்களில் எவரேனும் பதில் தருவாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக