கீழ்வரும் நகல் பதிவுகளை வாசியுங்கள்.
அம்மனிடம் சக்திவேல் பெற்றதால், சந்நிதியில் அமர்ந்த முருகப் பெருமானின் திருமேனி பேரானந்தத்தால் சிலிர்க்க, அது கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்திருப்பார்களேயானால் அது வரவேற்கத்தக்க செயலாகும்.
முருகப்பெருமானின் மேனி சிலிர்க்கவில்லை. மாறாக, வேர்வைத் துளிகளைச் சிந்தியிருக்கிறது[இதற்குக் காரணம், சந்நிதியில் நிலவிய புழுக்கம்]. இதைக் கண்டு பக்தகோடிகள் மனம் வருந்தியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியேனும் புழுக்கம் காரணமாகக் கந்தனின் திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்பாதிருக்க.....
கோயிலை நிர்வகிப்பவர்கள், சந்நிதியைக் குளிர்விப்பதற்கான[ஏ.சி.] வசதியை உடனடியாகச் செய்து முடித்தல் வேண்டும்.
செய்வார்களா?
=======================================================================
இதுபோன்ற செய்திகளை அன்றாடம் வெளியிட்டு ஆன்மிகப் பணி புரியும் ‘உண்மை விளம்பி’யான அந்தக் ‘கதிர்’ பரப்பும் நாளிதழுக்கு நம் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக