எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 18 ஜனவரி, 2020

ஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்!

ஆனந்த விகடன் தரத்திலும் விற்பனையிலும் முன்னிலை வகிக்கும் வார இதழ் ஆகும். தமிழைப் போற்றுவதிலும் நம் போற்றுதலுக்குரிய இதழாகத் திகழ்கிறது.

‘ஜூனியர் விகடன்’, விகடன் குழுவினரால் வெளியிடப்பட்டு விற்பனையிலும் சாதனை நிகழ்த்துகிறது என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்றுதான்.

21.01.2020 தேதியிட்ட இவ்விதழில், ‘கழுகார் கேள்வி பதில்’ பகுதியில் வெளியான, தஞ்சை மாவட்டம் கருத்தட்டாங்குடியைச் சேர்ந்த வி.வெற்றி என்ற வாசகரின் கேள்விக்குக் கழுகார் அளித்த பதில் விகடன் குழுவினரின் தமிழ்ப் பற்றுக்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது.

கேள்வி:
’தஞ்சாவூர்ப் பெரிய கோயில் குடமுழுக்கு வைபவத்தைத் தமிழ்முறைப்படி நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை நியாயமானதுதானே?

பதில்:
நியாயமானதுதான். கோயில் இருப்பதே தமிழகத்தில்தான் எனும்போது சிவனடியார்களின் கோரிக்கையைக் கட்டாயம் ஏற்க வேண்டும். ஆண்டவனுக்கு அத்தனை மொழிகளும் அத்துபடியா இருக்கலாம். ஆனால், அவனுக்கு முன்பாக நிற்பவர்களுக்குப் புரியும் மொழியில் நடத்துவதுதான் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

விகடனுக்கு நன்றி. மீண்டும் நம் பாராட்டுகள்.
===========================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக