“ரஜினி அரசியலுக்கு வருவார்; கட்சி தொடங்குவார்; ஊழலற்ற நல்லாட்சி தருவார்” என்று நடிகர் ரஜினிக்கு, ஆண்டுக்கணக்கில் ‘பராக்...பராக்...பராக்’ சொல்லிக்கொண்டிருப்பவர் தமிழருவி மணியன்.
“என் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் ‘முதல்வர்’ நான் அல்ல” என்று திட்டவட்டமாக நடிகர் அறிவித்துவிட்ட நிலையில், முதல்வர் நாற்காலியில் அமர இருப்பவர் தமிழருவி மணியனே என்பது நம் போன்ற அரசியல் நோக்கர்களின் அனுமானம். மணியன் அவர்களும் இதை எதிர்பார்த்திருத்தல்கூடும்.
இவருக்குப் போட்டியாக இப்போது இன்னொருவர்! அவர்?
திருநாவுக்கரசர்.
இவர் இன்று நடிகரைச் சந்தித்திருக்கிறார். வாய்ப்பை நழுவ விடுவார்களா நம் ஊடக நிருபர்கள்? “கட்சி தொடங்குவது பற்றிப் பேசத்தான் ரஜினி உங்களை அழைத்தாரா?” என்று கேட்டார்கள்[நியூஸ் 7, 10.03.2020 பிற்பகல்11.40 செய்தி]
“கேட்ட கேள்விக்கு உண்டு இல்லைன்னு பதில் சொல்லணும். அதை விடுத்து, ‘அவருக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை’ என்று சொல்லி அந்த உச்ச நடிகரை ஏன் உச்சந்தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறீர்கள்? எல்லாம் பதவி படுத்துகிற பாடுதானே?
-கேள்விகளைக் கேட்டவர் எந்தவொரு நிருபரும் அல்ல; நாம்தான்!
=======================================================================