கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், ‘மனிதம்’ போற்றும் படைப்புகளைப் பதிவு செய்வதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

திங்கள், 9 மார்ச், 2020

ஜக்கி வாசுதேவ் கடவுளுக்கே குருவா?!

சத் (Sat) (சமக்கிருதம்सत्) எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளைக்[கடவுள்] குறிக்கிறது[விக்கிப்பீடியா].

இவரென்ன பரம்பொருளுக்கே குருவா?

‘சத்தியம், சத்துவ குணம், உண்மை, தூய்மை, நன்மை ஆகிய சமசுகிருத சொற்களின் அடிச்சொல்லே சத் ஆகும்’ என்று இவ்வாறானதொரு விளக்கத்தையும் தருகிறது விக்கிப்பீடியா.

‘சத்தியம், சத்துவ குணம், உண்மை, தூய்மை, நன்மை’ ஆகியவற்றின் பிறப்பிடமா இவர்?

அல்லது,

சத்தியம் முதலானவற்றைத் தம்மகத்தே கொண்டு வாழ்வோருக்கெல்லாம் இவர் குருவா?

எந்த அடிப்படையில் இவர் தன்னைத்தானே ‘சத்குரு’ என்று அழைத்துக்கொள்கிறார்?

அல்லது,

இந்தப் பட்டத்தை இவருக்கு அளித்துப் பெருமைப்படுத்திய பெருமகன் யார்?

‘பரமஹம்சர் என்னும் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் பெரும்பான்மை மக்களை இளிச்சவாயர்கள் ஆக்கினானே நித்தி, அது போன்றதொரு மோசடித்தனம்தானே இதுவும்?

பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இந்த ஜக்கியின் முன்னால் கை கட்டி நின்று ஆசீர்வாதம் பெறுவது காலத்தின் கோலம்!
                                                 *                               *                           *
கை கட்டிப் பவ்வியமா உட்கார்ந்திருப்பவரை நமக்குத் தெரியும். அடுத்த படத்தில் இருக்கிற அம்மா யாரு?

ஜக்கியின் மகளா, பேத்தியா?

===============================================================================