அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 8 மார்ச், 2020

'அவர்கள்' அப்போதும் இப்போதும் புத்திசாலிகள்!! நாம் எப்போதும் முட்டாள்கள்!!

இன்றைய[08.03.2020] ‘செய்தி[ப்] புனல்’ இல் ‘சனிப் பிரதோஷம்’ பற்றிக் கீழ்க்காணும் வகையில் செய்தி வெளியாகியிருக்கிறது. 

#சனிப்பிரதோஷ நாளில் சிவனோடு நந்தியை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா[?]

[By மதுரை]

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். ஏழரை[ச்] சனி, அஸ்தம[ச்] சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க[க்] கண்டிப்பாக[ச்] சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கி[ச்] சிவன் அருள் கிடைக்கும். சனி[ப்] மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும்.



சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ[?] காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக[ப்] புராணங்கள் கூறுகின்றன. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை[ப்] பிரதோஷங்கள் உள்ளதாக[ப்] புராணங்கள் கூறுகின்றன. திரயோதசி நாள் முழுக்க உண்ணாமல் இருந்து நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை[க்] கூறியபடி பிரதோஷ காலத்தில் சிவபெருமானோடு தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்#
தங்களின் வருகைக்கு நன்றி.
நீங்கள் சனிப் பிரதோஷத்திற்குச் சென்றீர்களா? கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறைந்ததா? பஞ்சமா பாவங்களும் நீங்கி, சிவன் அருள் கிடைத்ததா? சனி மகாபிரதோஷ நாளில் சாதாரண தினப் பிரதோஷப்பலனைப் அடைந்தீர்களா?
ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறியபடி பிரதோஷ காலத்தில் சிவபெருமானோடு தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டுச்  சகல விதமான நன்மைகளையும் பெற்றீர்களா?
“ஆம்” எனின், மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும்.
அதென்னங்க பிரதோஷம்? 
=========================================================================