திருவண்ணாமலையில் வேலைவெட்டி இல்லாம சுற்றிக்கொண்டிருந்த இந்த ஆள் ஒரு ஆசிரமத்தை ஆரம்பித்தான். கொஞ்சம் பேச்சுத் திறமை உள்ளவன்; ரொம்பவே புத்திசாலியும்கூட.
மக்கள் தொகையில் படுமூடர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பது அத்துபடியாய் இவனுக்குப் புரிந்திருந்தது. துணிந்து, ‘பரமஹம்சர்’ பெயரை இணைத்துத் தன்னை ‘பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்று அறிவித்தான்.
பக்திப்பித்துப் பிடித்து அலைபவர்கள் சாரி சாரியாகச் சென்று இவனைத் தரிசனம் பண்ணினார்கள்.
ஊரூருக்கு ஆசிரமம் தொடங்கினான். தான் கடவுளின் அவதாரம் என்று மேடை போட்டு முழங்கினான். அந்த மேடையிலேயே பல பேர் முன்னிலையில் குமரிப் பெண்களைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து ஆசீர்வாதம் பண்ணுவதாக நடித்தான்.
நடிகையுடனான இவனின் தொடர்பு அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் இவன் திருந்தவில்லை. தன் அடாவடித்தனத்தை நிறுத்தவில்லை.
தரையில் அமர்ந்து தியானம் செய்கையில் என் தேகத்தை இரண்டடி உயரத்துக்கு அந்தரத்தில் மிதக்கச் செய்வேன் என்றான். செய்துகாட்டவில்லை, தன்னைத் தட்டிகேட்பார் எவரும் இல்லை என்ற தைரியத்தில்.
சிவபெருமான் போல வேடம் புனைந்து “நானே கடவுள்” என்றான். நம் ஆட்சியாளர்களோ, அரசியல்வாதிகளோ, சமுதாயச் சீர்திருத்தவாதிகளோ கண்டுகொள்ளவில்லை.
வயசுப் பெண்களிடம் அத்துமீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்படும் நிலை உருவானபோது அயல்நாட்டுக்குத் தப்பி ஓடினான்.
எங்கோ ஒளிந்திருந்துகொண்டு, ஈக்வெடார் அருகே, கைலாசா என்னும் பெயரில் தீவு அமைத்துத் தனக்கெனத் தனி நாடு உருவாக்கிகொண்டிருப்பதாக ஒரு பொய்யைப் பரப்பினான்.
இப்போது, கீழ்க்காணும் ஓர் அறிக்கையை[இந்து தமிழ், 15.03.2020] வெளியிட்டிருக்கிறான்.
அனைத்து நாடுகளின் ஆட்சித் தலைவர்களையும் நாம் வேண்டிக்கொள்வது.....
உடனடியாக இந்தப் பொய்யனைக் கைது செய்து, இவன் உடம்பில் ஊசி மூலம் ‘கொரோனா’ வைரஸ் கிருமிகளைச் செலுத்துங்கள். இவன் தப்பிப் பிழைக்கிறானா பார்ப்போம்.
உங்களின் இந்த நடவடிக்கை, இவனைப் போலவே, தங்களை அவதாரங்கள் என்று சொல்லித் திரியும் போலிச் சாமியார்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
=======================================================================