அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 3 மார்ச், 2020

கடவுள் தன்னைப் ‘புதுப்பித்தல்’(மேம்படுத்தல்)செய்கிறாரா?!

பிரபஞ்சப் பொருள்கள், உயிர்கள் என அனைத்தும் தாமாகத் தோன்றியவை என்றோ, இருந்துகொண்டே இருப்பவை என்றோ சொல்லப்படுவதை ஆன்மிகவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிறார்கள்.

அவர் தன் படைப்புத் தொழிலை முடித்துக்கொண்டுவிட்டாரா, இல்லை, இன்னமும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறாரா? முடித்துக்கொண்டாரென்றால் அதன் பிறகான அவரின் தொழில் என்ன? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினால், அவர்களிடமிருந்து நேரடியான பதில் வராது; விதண்டவாதம் என்பார்கள்.

மேற்கண்டவை, பலராலும் கேட்கப்பட்ட மிகப் பழைய கேள்விகள். புதிய[???] சில கேள்விகள் நீண்ட நெடுங்காலமாக என் அடிமனதை உறுத்திக்கொண்டே இருக்கின்றன. அவை.....

கடவுளால் படைக்கப்பட்டவை அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன[மாற்றமே நிலையானது]. அவை, தாமாகத் தோன்றாத காரணத்தால், தாமாக மாறுவதும் சாத்தியமில்லை. கடவுளால் மட்டுமே அது முடியும். ஆக, படைப்புத் தொழிலை முடித்துக்கொண்டுவிட்ட, அல்லது செய்துகொண்டே இருக்கிற அவர்,  தம்மால் படைக்கப்பட்டவற்றைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே, அல்லது, மேம்படுத்திக்கொண்டே இருக்கிறாரா?
புதுப்பித்தல், அல்லது, மேம்படுத்தல்(update)  எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

புதுப்பித்தலைச் செய்கிற அவர் தவறாமல் தன்னையும் புதுப்பித்துக்கொள்கிறாரா?

படைப்பு ரகசியங்களைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு சாமானியனின் கேள்விகள் இவை.
========================================================================